நீதிமன்றங்களில் அம்பேத்கர் படம் நீக்கப்படாது; வெடித்த சர்ச்சை - பின்னணி என்ன?

Tamil nadu Madras High Court
By Sumathi Jul 25, 2023 04:16 AM GMT
Report

நீதிமன்றங்களில் உருவப்படங்கள் வைத்திருப்பது தொடர்பான சுற்றறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உருவப்பட சர்ச்சை

அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கும் உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் எம்.ஜோதிராமன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அதில், கடந்த காலங்களில் பல்வேறு இடங்களில் மோதல் மற்றும் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஆகியவற்றுக்கு வழிவகுக்கும் வகையில்,

நீதிமன்றங்களில் அம்பேத்கர் படம் நீக்கப்படாது; வெடித்த சர்ச்சை - பின்னணி என்ன? | Ambedkars Picture Be Placed In Courts

தேசிய தலைவர்களின் படங்களும், சிலைகளும் வைக்கப்பட்ட சம்பவங்கள் சுட்டிக்கட்டி, காந்தி மற்றும் திருவள்ளுவர் உருவப்படம் அல்லது சிலை தவிர வேறு படங்கள், சிலைகளுக்கு நீதிமன்றங்களில் அனுமதி கிடையாது எனக் குறிப்பிட்டிருந்தார்.

 அரசு உறுதி

ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் படத்தை கூட நீதிமன்றங்களில் வைக்க அனுமதியில்லை என கூறுவதா என்று பல்வேறு வழக்கறிஞர் சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நீதிமன்றங்களில் அண்ணல் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படக்கூடாது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு ஏற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டைக் கேட்டறிந்த தலைமை நீதிபதி, நீதிமன்றங்களில் எந்த தலைவர்களின் புகைப்படத்தையும் அகற்ற உத்தரவிடப்படவில்லை. தற்போது உள்ள நடைமுறையே தொடரும் (Status Quo to be continued) எனத் தெரிவித்துள்ளார்.