கப் இல்லையே...ஆரஞ்சு கேப் வாங்கி என்ன பிரயோஜனம்...விராட்டை விடாமல் துரத்தும் CSK வீரர்!!
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்ததற்கான ஆரஞ்சு கேப்'பை பெங்களூரு அணியை சேர்ந்த விராட் கோலி வென்றுள்ளார்.
முடிவு பெற்ற ஐபிஎல்
ரசிகர்களை கடந்த 3 மாதங்களுக்கு கட்டி போட்டு வைத்திருந்த ஐபிஎல் தொடர் நேற்றுடன் முடிவு பெற்றுள்ளது. 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை தோற்கடித்து கொல்கத்தா கோப்பையை வென்றுள்ளது.
அதே போல அதிக ரன்களை குவித்ததற்கான ஆரஞ்சு கேப்'பை விராட் கோலி வென்றுள்ளார். அவர் 15 போட்டிகளில் 741 ரன்களுடன் வென்றுள்ளார். அதிக விக்கெட் வீழ்த்தியதற்கான பர்பில் கேப்'பை பஞ்சாப் அணியை சேர்ந்த அர்ஷல் படேல் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி தன்வசப்படுத்தியிருக்கிறார்.
பிரயோஜனம் இல்லை
விராட் கோலி ஆரஞ்சு கேப் வெல்வது இது இரண்டாவது முறையாகும். சென்னை அணியை அதிரடியாக வெற்றி கொண்டதன் மூலம் playoff வாய்ப்பு பெற்ற பெங்களுரு அணி, Eliminator -1 போட்டியிலேயே ராஜஸ்தானிடம் தோல்வியடைந்து வெளியேறியது.
ஆனால், சென்னை அணியை வெற்றி கொண்டபோது மைதானத்தில் பெங்களூரு வீரர்கள் கொண்டாடிய விதத்தை பலரும் கடுமையாக விமர்சித்துவருகிறார்கள்.
அதில், சென்னை அணியை சேர்ந்த முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு சற்றும் யோசிப்பதில்லை.
அவர் நேற்று தொடருக்கு பிறகு பேசும் போது, தொடரில் ஆரஞ்சு கேப் ஜெயித்து எந்த பிரயோஜனமும் இல்லை என்றும் கோப்பியை வெல்ல வேண்டும் என கூறி மீண்டும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்.