தனி தொகுதியில் ஜாதியை மாற்றி வெற்றி பெற்ற "அம்பாசமுத்திர அம்பானி" நடிகை...நீதிமன்ற அதிரடி தீர்ப்பு
பிரபல நடிகையும் பாஜகவின் எம்.பி'யான நவ்நீத் ராணா ஜாதி மாற்றி தேர்தலில் போட்டியிட்டதாக புகார்கள் எழுந்தது.
நவ்நீத் ராணா
தமிழில் கருணாஸ் நாயகனாக நடித்த "அம்பாசமுத்திர அம்பானி" என்ற படத்தில் மூலம் கவனம் பெற்றவர் நடிகர் நவ்நீத் ராணா.இப்படத்திற்கு முன்பாகவே தமிழில் 2008-ஆம் ஆண்டு வெளியான "அரசாங்கம்" படத்திலும் அவர் நடித்திருந்தார்.
தெலுங்கில் எண்ணற்ற படங்களில் நடித்துள்ள நவ்நீத் ராணா சில ஹிந்தி, கன்னட, பஞ்சாபி மொழி படத்திலும் நடித்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக மகாராஷ்டிரா மாநிலத்தினி அமராவதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் நவ்நீத் ராணா.
அதிமுக "டைட்டானிக்"கை உடைத்து விட்டார்கள் - ஆகையால் இங்கு வந்துட்டேன் - தீவிர பிரச்சாரத்தில் செந்தில்
வெற்றி பிறகு சுயேட்சையாகவே இருந்து அவர், அண்மையில் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார். முன்னதாக 2014-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக களமிறங்கி தோல்வியடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனி தொகுதியான அமராவதியில் இவர் வேட்புமனு தாக்கலின் போது, தன்னை மோச்சி சமூகத்தைச் சேர்ந்தவர் என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், உயர்சாதியை சேர்ந்த நவ்நீத் ராணா போலி சான்றிதழின் மூலம் ஜாதி சான்றிதழ் சமர்பித்ததாக சிவசேனா கட்சியை சேர்ந்த ஆனந்த் ராவ் என்பவர், மும்பை மாவட்ட ஜாதி சான்றிதழ் ஆய்வு கமிட்டியில் புகார் அளித்த நிலையில், அதன் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் நவ்நீத் ராணாவுக்கு ஆதரவாக கமிட்டி தீர்ப்பளித்தது.
நீதிமன்றம் அதிரடி
இந்த தீர்ப்பை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் ஆனந்த் ராவ் வழக்கு தொடர்ந்தார். உயர் நீதிமன்றத்தில் நவ்நீத் ராணாவிற்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டு அவருக்கு 2 லட்சம் ரூபாய் அபராதமும், உண்மையான ஜாதி சான்றிதழை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டப்பட்டது.
மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நவ்நீத் ராணா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்த நிலையில் அந்த மனுவில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.அந்த தீர்ப்பில், ஜாதி சான்றிதழ் ஆய்வு கமிட்டி வழங்கிய இறுதி தீர்ப்பில் குறுக்கிட்டு, உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்கப்பட்டது.
வரும் மக்களவை தேர்தலில் பாஜகவின் வேட்பாளராக அமராவதி(தனி) தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு பெற்ற நவ்நீத் ராணா, தீர்ப்பை தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று, வேட்பு மனுவை தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.