அதிமுக "டைட்டானிக்"கை உடைத்து விட்டார்கள் - ஆகையால் இங்கு வந்துட்டேன் - தீவிர பிரச்சாரத்தில் செந்தில்
பிரபல நடிகர் செந்தில், பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
பிரச்சாரம்
நாட்டில் முதல் மக்களவை தேர்தலாக தமிழகத்தில் வரும் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகம் முழுவதிலும் தேர்தல் பிரச்சாரங்களில் கட்சி தலைவர்கள் இறங்கியுள்ளார்கள்.
திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, பாஜக கூட்டணி என 4 முனை போட்டி நிலவும் நிலையில், பிரச்சாரம் களத்தில் தற்போது நிறைய நட்சத்திரங்களும் ஈடுபட்டுள்ளனர்.
இதில், பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் செந்திலும் இறங்கியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த போது அதிமுகவில் இருந்து அவர் அதிமுகவிற்கு ஆதரவாக வாக்குகளை சேகரித்தார். ஆனால், அவரின் மறைவிற்கு பிறகு தற்போது கட்சி மாறியுள்ளார் செந்தில்.
இங்கு வந்துவிட்டேன்..
கோவையில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் பாஜகவில் இணைந்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடும் கோவையில் அவருக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார் செந்தில்.
அப்போது அவர் பேசியது வருமாறு, நான் அம்மா கட்சியில முன்னாடி இருந்தேன்...அம்மாவிற்கு அப்புறம் அந்த கட்சி சரியில்லை என்று நல்ல கட்சி வேண்டுமென்று இங்கு(பாஜக)விற்கு வந்துவிட்டேன்.
புரட்சி தலைவரும், அம்மாவும் டைட்டானிக் கப்பலை போன்ற ஒரு கட்சியை வைத்திருந்தார்கள். ஆனால், எடப்பாடி பழனிசாமி அந்த கப்பலை ஓட்ட தெரியாமல் பாறையில் முட்டி உடைத்துவிட்டார்கள் என்றார்.