ஒரே ஒரு போட்டோக்கு லட்சத்தில் பில் போடும் போட்டோகிராபர்!! வாரி இழைக்கும் அம்பானி
அம்பானி திருமணம்
இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவருமான ஆனந்த் அம்பானி, தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட் மற்றும் தொழிலதிபர் ஷைலா மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டை மணக்க உள்ளார்.
இந்த ஜோடி ஜூலை 12 ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளவுள்ளனர். ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரின் மகன் முகேஷ் அம்பானியின் ஆனந்த் அம்பானி மகனின் 2-வது திருமணம் முந்தைய கொண்டாட்டம் ஐரோப்பாவில் ஒரு ஆடம்பரமான பயணக் கப்பலில் துவங்கியுள்ளது.
முதல் கொண்டாட்டம் போலவே, 2-வது கொண்டாட்டத்திலும் பாலிவுட் நட்சத்திரங்களும் பல கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பாக சில புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.
பெறும் பணத்தை கொட்டி செலவு செய்து நடந்து வரும் இந்த கொண்டாட்டதிற்கான செலவு குறித்து வெகுஜன மக்கள் அறிந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள். அப்படித்தான், அம்பானி திருமணத்தின் போட்டோகிராபர் குறித்த தகவல் வெளியாகி பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
லட்சத்தில்...
பிரபல கேமராமேன் ஜோசப் ராதிக் என்பவர் இந்த நிகழ்ச்சியை படம் பிடிக்கிறார். இவர் தனது வேலைக்காக ஒரு நாளைக்கு சுமார் ₹1.25 லட்சம் முதல் ₹1.50 லட்சம் வரை பெறுகிறார் என்றும் வரிக்கு கூடுதலாக வசூலிக்கிறார் என கூறப்படுகிறது.
அது போக, இவர் தனது தங்குவதற்கும், போக்குவரத்து செலவும் தனியாக வசூலிக்கிறார். இதனை அறியும் பலரும் ஆச்சரியத்தில் ஆழ்கிறார்கள். முன்னதாக, இந்த ஜோசப் ராதிக் பிரபலமான புகைப்பட கலைஞராக பாலிவுட்டில் வளம் வருகிறார்.
கத்ரீனா - விக்கி கவுஷல், விராட் கோலி-அனுஷ்கா ஷர்மா, சித்தார்த் மல்ஹோத்ரா-கியாரா அத்வானி, கேஎல் ராகுல்-அத்தியா ஷெட்டி என பலரின் திருமணத்திற்கு இவரே புகைப்படக் கலைஞராவார்.