அம்பானி வீட்டின் பாலும் ஸ்பெஷல் தான்- நெதர்லாந்து நாட்டு மாடு!!தலைசுற்ற வைக்கும் ஒரு லிட்டர் விலை?
முகேஷ் அம்பானியின் முழு குடும்பமும் தனி சிறப்புடைய பால் ஒன்றை தான் பருகிறார்கள்.
அம்பானி
உலகில் கவனம் பெற்ற பணக்காரர், நாட்டின் முன்னணி பணக்காரர். வெற்றி பெறாத துறையே இல்லை என்ற அளவிற்கு கால் வைத்த அனைத்து துறைகளிலும் வெற்றியே. நாட்டின் முன்னணி திரை நட்சத்திரங்களில் துவங்கி, விளையாட்டு வீரர்கள் அரசியல் வாதிகள் என அனைவருமே பழக்கமான நெருங்கிய வட்டாரத்தில் தான் இருக்கிறார்கள்.
அப்படி இருக்கும் அம்பானி குடும்பம் பல விதத்திலும் தனித்துவமான குடும்பம் தான். அதற்கு ஒரு சிறப்பான எடுத்துக்காட்டு தான், அவர்கள் அருந்தும் பால். முகேஷ் அம்பானி, நீதா அம்பானி மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவரும் புனேவில் இருந்து வரும் ஒரு குறிப்பிட்ட இன பசுவின் பாலை தான் குடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பால்
இது ஊட்டச்சத்து நிறைந்த குணங்களுக்கு பெயர் பாலாம். புனேவில் அமைந்துள்ள பாக்யலட்சுமி பால் பண்ணையில் 3000'க்கும் மேற்பட்ட பசுக்களுடன் சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் இந்த இன மாடுகள் வளர்க்கப்படுகின்றனவாம்.
இந்த பால்பண்ணையில் ஒரு லிட்டர் பால் விலை சுமார் ரூ.152 ரூபாய் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அதிக மகசூல் தரும் இந்த மாட்டு இனத்திற்கு, கேரளாவில் இருந்து வரும் சிறப்பு ரப்பர் பூசப்பட்ட மெத்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மாடுகளுக்கு குடிக்க RO தண்ணீரும் வழங்கப்படுகிறது.
Holstein-Friesian மாட்டு இனமானது நெதர்லாந்தை பூர்வீகமாகக் கொண்டது மற்றும் உலகளவில் தொழில்துறை பால் பண்ணையில் ஆதிக்கம் செலுத்தும் இனமாகும். அவை தனித்துவமான அடையாளங்களைக் கொண்டுள்ளன, பொதுவாக கருப்பு மற்றும் வெள்ளை அல்லது சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில், பொதுவாக பைபால்ட் வடிவங்களைக் காண்பிக்கும்.
சொகுசு கப்பலில்...800 விருந்தினர்கள்..600 பணியாளர்கள் !! நடுக்கடலில் அம்பானியின் திருமணம் கொண்டாட்டம்
ஒரு ஆரோக்கியமான கன்று பிறக்கும் போது 40 முதல் 50 கிலோ அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும். ஒரு வயது வந்த ஹோல்ஸ்டீன் மாடு பொதுவாக 680-770 கிலோ எடையுள்ளதாக இருக்கும். இது ஒரு நாளைக்கு 25 லிட்டர் பால் கொடுக்கும் திறன் கொண்டது.
ஹோல்ஸ்டீன் ஃப்ரீசியன் பாலில் A1 மற்றும் A2 பீட்டா-கேசின் (புரதம்) நிறைந்துள்ளதாக பல ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. கூடுதலாக, இது புரதங்கள், மேக்ரோநியூட்ரியண்ட்ஸ், நுண்ணூட்டச்சத்துக்கள், அத்தியாவசிய கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் ஆகியவற்றிலும் நிறைந்துள்ளது.