அம்பானி திருமணம் - விவகாரத்தை சொல்லி சென்ற அபிஷேக் - ஐஸ்வர்யா??அதிரும் பாலிவுட்
சில காலமாகவே ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் விவாகரத்து செய்ய உள்ளார்கள் என்ற கருத்துக்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.
ஐஸ்வர்யா ராய்
நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும், பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 2007ம் ஆண்டு காதல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். திருமணத்திற்கு பிறகும் ஐஸ்வர்யா ராய் படங்களில் நடிப்பதை தொடர்ந்து வருகிறார்.
அவருக்கு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான "பொன்னியின் செல்வன்" படங்கள் பெரும் வெற்றியை கொடுத்திருந்தது. சில காலமாகவே ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் ஆகியோர் விவகாரத்து பெறவுள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி கொண்டே இருந்தன.
அதற்கு இடையிடையில் சில, செய்திகளும் உண்மை தான் அவர்கள் விவாகரத்து பெறுகிறார்கள் என்றும், சிலவை விவாகரத்து எல்லாம் இலை என்றெல்லாம் தொடர்ந்து பேசப்பட்டே வருகின்றன.
மீண்டும் விவாகரத்து
இந்தியாவின் கவனத்தை அம்பானி மகன் திருமணம் ஆக்கிரமித்துள்ளது. உலகின் பெரிய தலைகள் அனைவருமே திரண்டு விட்டார்கள் என கூறும் அளவிற்கு பெரும் நட்சத்திரங்கள், சினிமா - விளையாட்டு - தொழில்துறை என பலரும் கலந்து கொண்டுள்ளார்கள்.
இந்த திருமண நிகழ்ச்சிக்கு வந்த போது தான் மீண்டும் ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் விவாகரத்து குறித்தான பேச்சுக்கள் அதிகரித்துள்ளது. அதாவது, குடும்பமாக வந்திருந்தார் அமிதாப் பச்சன், அபிஷேக்கும் உடன் வந்தார். மகள் ஆராத்யாவுடன் வந்தார் ஐஸ்வர்யா ராய். அப்போது அபிஷேக் பச்சன் இல்லை.
போட்டோவிற்கு கூட தனியாகவே போஸ் கொடுத்து விட்டு சென்றார்கள். இதன் காரணமாக, இவர்களின் விவாகரத்து செய்து மீண்டும் தலைதூக்கியுள்ளது