தலைவர் கையில் கவனிச்சீங்களா !! எல்லார் கையிலும் பேண்ட் - அம்பானி கல்யாணத்தில் ஒவ்வொரு கலருக்கு ஒரு அர்த்தம்?
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் மிகவும் விமர்சையாக நடந்து முடிந்துள்ளது.
அசந்த உலகம்
அம்பானியின் வீட்டில் நடைபெற்ற திருமணம் உலக கவனம் பெற்றது. நாட்டின் பிரதம மந்திரியில் துவங்கி, விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள், திரை நட்சத்திரங்கள் என பலரும் குவிந்து விட்டார்கள்.
அவ்வளவு ஏன், நாம் சூப்பர்ஸ்டாரே அங்கு திருமண கொண்டாட்டத்தில் ஒரு ஸ்டேப் போட்டுவிட்டு தானே தமிழகம் வந்தார். அந்தளவிற்கு பிரமாண்டம், ஆச்சரியம். ஒவ்வொன்றிலும் நம்மை ஆச்சரியப்படவைத்த அம்பானி குடும்பத்தின் திருமண கொண்டாட்டத்தில், இதனை எத்தனை பேர் கவனித்தீர்கள்.
பேண்ட்
தலைவர் கையில் ரெட் கலர் பேண்ட், ஏ.ஆர்.ரகுமான் கையில் பிங்க் என ஒவ்வொருவருக்கும் ஒரு variety colour பேண்ட். இது என்னா'னு தெரியுமா?
அதாவது நிகழ்ச்சிக்கு வருகை தருபவர்கள் எந்த வரிசையில் அமரவேண்டும் என்பதை குறிக்கிறது இந்த கலர் பேண்ட். யார் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதன் அடிப்படையில் இந்த செட்டிங் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.