அம்பானி வீட்டில் கொடுத்துக்கொண்ட கிஃப்ட்டுகள் - அடேங்கப்பா..வாய் பிளக்க வைக்கும் தகவல்!

Reliance Mukesh Dhirubhai Ambani Mumbai
By Sumathi Jan 06, 2024 10:34 AM GMT
Report

அம்பானி வீட்டில் பகிர்ந்துக்கொண்ட பரிசின் மதிப்பு குறித்த தகவல் கவனம் ஈர்த்துள்ளது.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி குடும்ப சொத்து 100.4 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. உலகின் 13வது பணக்காரராகவும் உள்ளார். கடந்த சில ஆண்டுகளில் இவர் குடும்பத்திற்குள் பகிர்ந்துக்கொண்ட பரிசுகளின் மதிபே ஏராளம் எனலாம்.

ambani-family

2023 தீபாவளிக்கு முன்பாக முகேஷ் அம்பானி தனது மனைவி நீதா அம்பானிக்கு இந்தியாவின் மிக விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ச் எஸ்யூவி காரை பரிசளித்தார். இதன் மதிப்பு ரூ.10 கோடி.

அம்பானி மனைவி வைத்த பார்ட்டி - டிஸ்யூ பேப்பருக்கு பதில் ரூ.500 நோட்டா?

அம்பானி மனைவி வைத்த பார்ட்டி - டிஸ்யூ பேப்பருக்கு பதில் ரூ.500 நோட்டா?

காஸ்ட்லி பரிசுகள்

2007ல் நீதா அம்பானியின் 44வது வயது பிறந்தநாள் பரிசாக ஏ319 ரக ஏர்பஸ் ஜெட்டை வாங்கிக் கொடுத்தார். இதில், ஒரு அலுவலகம் ஒரு கேபினில் கேம் கன்ஸோல்கள், மியூசிக் சிஸ்டம், சாட்டிலைட் டிவி, வயர்லெஸ் கம்யூனிகேஷன், ஒரு மாஸ்டர் பெட்ரூம், பல வகையான ஷவர்கள் கொண்ட ஒரு பாத்ரூம், மூன் லைட்டிங் கொண்ட ஸ்கை-பார் போன்ற வசதிகள் உள்ளன. இதன் மதிப்பு ரூ.240 கோடி.

அம்பானி வீட்டில் கொடுத்துக்கொண்ட கிஃப்ட்டுகள் - அடேங்கப்பா..வாய் பிளக்க வைக்கும் தகவல்! | Ambani Family Costly Gifts Details

2019ல் அம்பானியின் மூத்த மகன் ஷ்லோகா மேத்தாவும் ஆகாஷ் அம்பானியின் திருமணத்தின்போது புதிய மருமகளுக்கு ரூ.451 கோடி வைர நெக்லெஸ் ஒன்றைப் பரிசாகக் கொடுத்தார். அந்த நெக்லெஸில் 91 வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து, இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்ட்டுக்கும் திருமண நிச்சயத்தின்போது, அவரது அண்ணன் ஆகாஷ் அம்பானி அவருக்கு 18 கேரட் பான்தரே டி கார்ட்டியர் வைர புரூச்சை பரிசாக வழங்கினார்.

அம்பானி வீட்டில் கொடுத்துக்கொண்ட கிஃப்ட்டுகள் - அடேங்கப்பா..வாய் பிளக்க வைக்கும் தகவல்! | Ambani Family Costly Gifts Details

புதிதாகப் பிறந்த இரட்டையர்களான கிருஷ்ணா, ஆதியாவுக்கு விலை உயர்ந்த 5 அடி நீள மஞ்சள் நிற குளோசெட்டை தாத்தா பாட்டியான முகேஷ் அம்பானியும் நீதா அம்பானியும் பரிசாக தந்தனர்.

ஆனந்த் அம்பானியின் திருமண நிச்சயதார்த்ததன்று புத்தம் புதிய பென்ட்லி காண்ட்டினென்டல் ஜிடிசி கார் அவருக்கு பரிசளிக்கப்பட்டுள்ளது. அதன் மதிப்பு ரூ.4.5 கோடி.