அம்பானி மனைவி வைத்த பார்ட்டி - டிஸ்யூ பேப்பருக்கு பதில் ரூ.500 நோட்டா?
நிகழ்ச்சியில் கைத்துடைக்க டிஸ்யூ பேப்பருக்கு பதில் ரூ.500 வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திறப்பு விழா
மும்பை பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் ஜியோ வேர்ல்டு சென்டர் வணிக வளாகத்தில் ‛நீதா முகேஷ் அம்பானி கலாசார மையம்' கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா சில நாட்களுக்கு முன்பு நடந்தது.
இதில், குடும்பத்தினர், அரசியல்வாதிகள், திரை பிரபலங்கள் உள்பட பல்வேறு துறைகளில் உள்ளவர்கள் பங்கேற்றனர். நடிகர் ரஜினிகாந்த், மகள் செளந்தர்யா, ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான், தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஐஸ்வர்யா ராய், ஆலியா பட்,
வதந்தி
மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துக்கொண்டனர். இந்நிலையில், நிகழ்ச்சியில் தவுலத் கி சாட் எனும் உயர்தர ஸ்வீட்டுடன் விருந்தினர்களுக்கு 500 ரூபாய் நோட்டு பரிமாறப்பட்டது பேசு பொருளாகியுள்ளது.
ஆனால், அந்த 500 ரூபாய் என்பது உண்மையான நோட்டு அல்ல. அது போலியானது. அதாவது கலாசார மைய திறப்பு விழாவில் பரிமாறப்பட்ட உணவு வகைகளை அழகாக காட்ட சில முயற்சிகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.