அமெரிக்காவில் அம்பானி வாங்கிய சொகுசு மாளிகை - விலையை கேட்ட ஆடிப்போயிருவீங்க!
அமெரிக்காவில் அதிநவீன சொகுசு வீட்டை முகேஷ் அம்பானி வாங்கி உள்ளார்.
முகேஷ் அம்பானி
இந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபர் முகேஸ் அம்பானி. இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்கா, இங்கிலாந்து,
ஆஸ்திரேலியா உள்பட பல்வேறு நாடுகளில் தொழில்கள் செய்து வருகிறார். இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ட்ரிபெகா (Tribeca) என்ற பகுதியில் ஒரு சொகுசு வீட்டை வாங்கியிருக்கிறார்.
சொகுசு மாளிகை
இந்த வீட்டின் மதிப்பு, இந்திய ரூபாயில் ரூ.153.59 கோடி 17,000 சதுர அடி பரப்பளவு கொண்டது. இந்த வீட்டில், கூடைப்பந்து மைதானம் உட்படப் பல்வேறு நவீன வசதிகள் இருக்கிறது.
அமெரிக்காவின் யுபிக்விட்டி நிறுவனத்தின் தலைவர் ராபர்ட் பெராவிடம் இருந்து வாங்கியிருக்கிறார்.
இதற்கு முன்பு, அங்கு புகழ் பெற்ற மேண்டரின் ஓரியண்டல் (Mandarin Oriental) ஹோட்டலில் 73.4% பங்குகளை ரூ. 2000 கோடிக்கு வாங்கியுள்ளார்.