அமேசானில் அடிக்கடி பொருள் வாங்குபவரா நீங்கள்? இனி.. கூடுதல் கட்டணம்
ஒவ்வொரு பொருளுக்கும் அமேசான் கூடுதல் கட்டணம் விதித்துள்ளது.
அமேசான்
அமேசான் நிறுவனம் இந்தியாவில் ஒவ்வொரு ஆர்டருக்கும் ரூ.5 பிளாட்ஃபார்ம் கட்டணத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கூடுதல் கட்டணமானது ஆன்லைன் ஆர்டரின் இறுதித் தொகையின் போது சேர்த்து வசூலிக்கப்படும்.
பிரைம் உறுப்பினர்களுக்கும் இது செல்லும். சில குறிப்பிட்ட விதிவிலக்குகள் மட்டும் பிரைம் உறுப்பினர்களுக்கு கிடைக்கும். கிஃப்ட் கார்டுகள் வாங்கும்போது இந்த சந்தை கட்டணம் பொருந்தாது.
பிளாட்ஃபார்ம் கட்டணம்
அமேசான் பிசினஸ், பஜார், அமேசான் நவ், அமேசான் ஃப்ரெஷ் ஆர்டர்களுக்கும் இந்த கட்டணம் கிடையாது. ரீசார்ஜ், பில் செலுத்துதல், டிக்கெட் முன்பதிவு, டிஜிட்டல் சந்தாக்களுக்கும் இந்த கட்டணம் கிடையாது.
இதுபோன்ற சந்தை கட்டணம் சொமேட்டோ, ஸ்விக்கி போன்ற உணவு டெலிவரி செயலிகளில் ஏற்கனவே உள்ளது. ஆரம்பத்தில் ரூ.2 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.11 வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.