வளைந்து, டேபிள் சேருக்குள் புகுந்து முதல்வர் பதவி பெற்றதுதான் தகுதியா - எகிறிய பாஜக!
முதல்வர் பதவியின் தகுதி குறித்து பாஜக நிர்வாகி அமர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.
கூட்டணி முறிவு
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கூட்டணியில் பாஜக தற்போது இல்லை எனத் தெரிவித்தார். இந்நிலையில் பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் அமர்பிரசாத் ரெட்டி,
“அதிமுகவை சார்ந்த திரு.ஜெயக்குமார், C.V. சண்முகம் மற்றும் செல்லூர் கே.ராஜூ போன்றவர்கள் தொடர்ந்து நமது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களை பொதுவழியில் அவமரியாதையாக பேசிவருவது வன்மையாக கண்டிக்கதக்கது.
பாஜக சாடல்
தேர்தல் வெற்றிக்காக பாஜக வினர் கொண்ட கொள்கையில் ஒரு போதும் சமரசம் செய்திட மாட்டோம். மக்களின் நலனுக்காகவே பாஜக-அதிமுக கூட்டணியே தவிர 2024 பாராளுமன்ற மற்றும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அல்ல. வரும் காலங்களிலும் மத்தியில் அதிமுக கூட்டணி இன்றி பாஜக தனிபெருபான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்கிற அறியாமையின்றி பேசுகிறார்கள்.
வளைந்து, குனிந்து டேபிள் சேருக்குள் புகுந்துச் சென்று, முதல்வர் பதவிக்கு வந்தது தான் தகுதியா? ஜெயக்குமார். அப்படி யாரிடமும் குனிந்து, வளைந்து கும்பிடு போட்டு பதவிக்கு வராதவர் எங்கள் தலைவர் அண்ணாமலை.
அது தான் எங்கள் தலைவருக்கான பெருமைமிகு தகுதி. கோடநாடு கொலை, -கொள்ளை போன்ற சர்ச்சையில் சிக்கியிருப்பதுதான், ஒரு கட்சித் தலைவருக்கான தகுதி என அதிமுக ஜெயக்குமார் நினைத்தால், அப்படிப்பட்டத் தகுதி எங்கள் தலைவருக்கு இல்லை தான் எனக் குறிப்பிட்டுள்ளார்.