உயிரே போனாலும்..ஆட்சியை அமைத்தே தீருவோம்!! அமர் பிரசாத் ரெட்டி உறுதி !!
உயிரே போனாலும் தான் பாஜகவில் தான் நீடிப்பேன் என அமர் பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார்
அமர் பிரசாத் ரெட்டி
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வீட்டிற்கு அருகே இருந்த கொடிக் கம்ப விவகாரத்தில் அதிகாரிகள் மற்றும் ஜேசிபி ஓட்டுநர் மீது தாக்குதலில் ஈடுபட்டதாகக் பாஜகவின் நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி கைது செய்யப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, ஜாமீன் கோரி அமர் பிரசாத் ரெட்டி தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், ஜேசிபி வாகனத்தை சேதப்படுத்தியதற்காக எத்தனை நாட்கள் சிறையில் வைத்திருப்பீர்கள் என கேள்வி எழுப்பி, சேதப்பட்ட ஜேசிபி வாகன உரிமையாளர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கினார்.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியதையடுத்து, அமர்பிரசாத் ரெட்டி புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். விடுதலையான பிறகு நேராக பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு வந்த அமர்பிரசாத் ரெட்டிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ள அமர் பிரசாத் ரெட்டி கூறுகையில், 2026-இல் தமிழ்நாட்டில் நாங்கள் ஆட்சி அமைத்தே தீருவோம் என நம்பிக்கை தெரிவித்து, கட்சிக்காக கொடிக்காக சிறைக்கு சென்றது பெருமையாக உள்ளது என்றும் உயிர் இருக்கும் வரை கட்சியில் தான் இருப்பேன் எனக் கூறினார்.