ரன்வீருக்கு ஆதரவு? சூப்பர் மார்க்கெட்டில் நிர்வாணமாக வலம் வந்த பிரபல மாடல்!
நடிகர் ரன்வீர் சிங் நிர்வாண போட்டோஷூட்டிற்கு ஆதரவாக ஒரு மாடல் அழகி நிர்வாணமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
ரன்வீர் சிங்
பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் ரன்வீர் சிங் வித்தியாசமான உடைகள் அணிந்து போட்டோஷூட் நடத்தி சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டவர்.
சமீபமாக அவர் நடத்திய நிர்வாண போட்டோஷூட் மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ரன்வீர் சிங்கிற்கு எதிர்ப்பு குரல்கள் எழுந்த நிலையில் பெண்களின் உணர்வை புண்படுத்தியதாக கூறி அவர்மீது மும்பை போலீஸில் புகாரும் அளிக்கப்பட்டது.
போட்டோஷூட் சர்ச்சை
ஆனால் ரன்வீருக்கு ஆதரவு அளிக்கும் வகையில், விஷ்ணு விஷால் தனது புகைப்படங்களை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து சில பிரபலங்களும் நிர்வாண போட்டோஷூட் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினர்.
அதன் அடிப்படையில், தற்போது பெண் பிரபலம் ஒருவர் ஆதரவு குரல் எழுப்பியுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த மாடல் அழகியான அமண்டா செர்னி என்பவர் சூப்பர் மார்க்கெட்டில் திடீரென ஆடைகளை கழற்றி நிர்வாணமாக வலம்வந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவர் வெளிப்படையாக ரன்வீர் சிங்கிற்கு ஆதரவாக இவ்வாறு செய்ததாக சொல்லவில்லை என்றாலும், அவரிடம் இந்த நடவடிக்கை ரன்வீருக்கு ஆதரவளிக்கும் வகையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த வீடியோவையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.