பொன்னியின் செல்வனில் நடிக்க மறுத்த அமலா பால் - மணிரத்னம் அழைத்தும்...ஏன் தெரியுமா?
அமலா பால் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக லைகா தயாரிக்க மணிரத்னம் அதை இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் வந்தியதேவன், அருள்மொழிவர்மன், ஆதித்ய கரிகாலன், குந்தவை, நந்தினி என பல கேரக்டர்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
இப்படத்தில் விக்ரம் ,கார்த்தி, ஜெயம் ரவி ,ஜெயராம் ,ஐஸ்வர்யா ராய் ,த்ரிஷா என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.சமீபத்தில் ரிலீஸ் ஆன PS 1 ட்ரைலருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது.
அமலா பால்
பாடல்களும் பட்டி தொட்டியெங்கும் ஒலித்து வருகிறது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இந்தப் படமானது செப்டம்பர் 30ஆம் தேதி பிரமாண்டமாக அனைத்து திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை நிராகரித்ததாக அமலா பால் தெரிவித்து இருக்கிறார்.
பொன்னியின் செல்வனில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க அமலா பாலை அணுகி இருக்கிறார் மணிரத்னம். ஆனால் அவர் முடியாதென மறுத்துவிட்டாராம். அது பற்றி தற்போது ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார் அமலா பால்."நான் மணி சாரின் பெரிய ரசிகை. மேலும் அவருடன் ஒரு ஆடிஷனுக்கு சென்று இருக்கிறேன்.
mental state
ஆனால் அந்த முறை நான் தேர்வாகவில்லை. அதற்கு பிறகு 2021ல் அதே ப்ரொஜெக்ட்டுக்கு என்னை அணுகினார்." "ஆனால் அதில் நடிக்க mental stateல் நான் இல்லை, அதனால் முடியாது என சொல்லிவிட்டேன்.
அதற்காக இப்போது வருத்தப்படுகிறேனா என கேட்டால் 'இல்லை' என்று தான் சொல்வேன்" என தெரிவித்துள்ளார்.