ரஜினியின் நண்பருக்கு "No" சொல்லி....நாகர்ஜூனாவிற்கு 2-வது மனைவியான அமலா
நடிகை அமலா தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவை திருமணம் செய்து கொண்டார் செட்டிலாகினார்.
அமலா
தமிழ் சினிமாவின் 80-களின் கனவு கன்னியாக ரசிகர்களின் மனதை பெரிதும் கவர்ந்தவர் அமலா. டி.ஆர்.ராஜேந்திரனின் மைதிலி என்னை காதலி படத்தில் 1986-ஆம் ஆண்டு அறிமுகமான அமலாவின் 2-வது படமான மெல்ல திறந்த கதவு படமே பெரும் வெற்றி படமாக அமைந்தது.
அதனை தொடர்ந்து ரஜினி, கமல், மைக் மோகன், பிரபு என அப்போதைய தமிழின் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர், தெலுங்கில் அறிமுகமாகி பெரும் பிரபலமடைந்தார்.
தெலுங்கில் அமலா அறிமுகமானது நாகர்ஜூனாவுடன் "கிராயி டாடா" என்ற படம். பின்நாளில், இவர்களே கடந்த 1992-ஆம் ஆண்டு திருமண செய்து கொண்டனர்.
வில்லன் நடிகர்
தெலுங்கு சினிமாவில் மிக பெரிய குடும்பமாக கருதப்படும் நாகேஸ்வர் ராவின் மகனான நாகர்ஜூனாவின் 2-வது மனைவியானார் அமலா.
ஆனால் நாகர்ஜூனாவை திருமணம் செய்வதற்கு முன்பே 1987-இல் பிரபல வில்லன் நடிகரான ரகுவரன், அமலாவிற்கு காதல் ப்ரொபோஸ் செய்துள்ளார். கூட்டு புழுக்கள் என்ற படத்தில் இருவரும் நடித்து போது ரகுவரன் தனது காதலை வெளிப்படுத்தியதாக கூறப்படும் நிலையில், அதனை அமலா மருத்துள்ளதாக கூறப்படுகிறது.
நீண்ட காலமாக சினிமாவில் நடிக்காமல் இருந்த அமலா, 2022-ம் ஆண்டு வெளிவந்த கணம் என்கிற படம் மூலம் மீண்டும் ரீ-எண்ட்ரி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நாகார்ஜூனா - அமலா தம்பதிக்கு அகில் என்ற மகன் உள்ளார்.