ஆடை இல்லாமயே நடிச்சிட்டேன்.. அது எல்லாம் ஒரு விஷயமா - அமலா பால் அதிரடி பதில்

Amala Paul
By Sumathi Apr 24, 2023 05:30 PM GMT
Report

லிப்லாக் காட்சியில் நடித்தது குறித்து அமலா பால் பதிலளித்துள்ளார்.

அமலா பால்

மலையாள நடிகையான அமலா பால் தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். இவர் தமிழில் தெய்வ திருமகள்,தலைவா, வேலையில்லா பட்டதாரி, நிமிர்ந்து நில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

ஆடை இல்லாமயே நடிச்சிட்டேன்.. அது எல்லாம் ஒரு விஷயமா - அமலா பால் அதிரடி பதில் | Amala Pauls Discussion On Liplock Scene

இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தற்போது, பிருத்விராஜ்க்கு ஜோடியாக அமலா பால் நடித்துள்ள மலையாள படம் ஆடு ஜீவிதம். பிரபல எழுத்தாளர் பென் யாமின் எழுதிய நாவலை மையமாக வைத்து இந்த படத்தை இயக்கியுள்ளார் பிளசி.

லிப்லாக் காட்சி

சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி அதில் இடம்பெற்றிருந்த பிருத்விராஜ் அமலாபாலின் லிப்லாக் காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதுகுறித்து அமலாபாலிடம் கேட்ட போது, ‛‛ஆடு ஜீவிதம் படத்தின் கதையை சொன்னபோது லிப்லாக் காட்சி இருப்பதை சொல்லிவிட்டார்கள்.

ஆடை இல்லாமயே நடிச்சிட்டேன்.. அது எல்லாம் ஒரு விஷயமா - அமலா பால் அதிரடி பதில் | Amala Pauls Discussion On Liplock Scene

இந்த படத்தின் கதைக்கும் காட்சிக்கும் அது அவசியப் பட்டதால் நடிப்பதற்கு ஒத்துக் கொண்டேன். என்னை பொருத்தவரை கதைக்கு தேவைப்பட்டதால் ஆடை என்ற படத்தில் நிர்வாணமாக கூட நடித்தேன்.

கதைக்கு ஏற்ப நடிப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. அதிலும் ஆடையே இல்லாமல் நடித்த எனக்கு லிப்லாக் காட்சியில் நடிப்பது எல்லாம் ஒரு விஷயமே இல்லை'' எனத் பதிலளித்துள்ளார்.