கோயிலில் இருந்து வெளியேற்றப்பட்ட நடிகை அமலா பால் – உருக்கமான பதிவால் ரசிகர்கள் சோகம்
நடிகை அமலா பால் கேரளாவில் உள்ள திருவைராணிகுளம் மகாதேவர் கோயிலுக்கு சென்ற நிலையில் அவரை கோயில் நிர்வாகம் அனுமதிக்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெளியேற்றப்பட்ட நடிகை அமலபால்
மலையாள நடிகையான அமலா பால் தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். இவர் தமிழில் தெய்வ திருமகள்,தலைவா, வேலையில்லா பட்டதாரி, நிமிர்ந்து நில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
இந்தநிலையில், கேரளாவின் எர்ணாகுளத்தில் அமைந்துள்ள திருவைராணிகுளம் மகாதேவர் கோயிலுக்கு நடிகை அமலா பால் சென்றுள்ளார். அப்போது கோயிலுக்குள் அமலபால் அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
கோயிலில் மாற்று மதத்தினருக்கு அனுமதியில்லை என்றும் இந்து மதத்தினருக்கு மட்டும் அனுமதி என்று கோயில் அதிகரிகள் தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது. இதனால் நடிகை அமலா பால் அதிருப்தி அடைந்தார். இறுதியில் கோயிலுக்கு எதிரே உள்ள சாலையில் இருந்து இறைவனை தரிசனம் செய்ய நேரிட்டதாக அமலா குறிப்பிட்டுள்ளார்.
விரைவில் மதப் பாகுபாடுகளில் மாற்றம் ஏற்படும்
இச்சம்பவம் பற்றி நடிகை அமலா பால் கோவிலின் பார்வையாளர் பதிவேட்டில் அவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார், அதில் அவர் நாட்டில் இன்னும் பாகுபாடு இருப்பதை அறிந்து கொள்வது வருத்தமாக இருக்கிறது என்று கூறினார்.
"2023-ல் மதப் பாகுபாடு இன்னும் நிலவுவது வருத்தமும் ஏமாற்றமும் அளிக்கிறது. என்னால் தேவியின் அருகில் செல்ல முடியவில்லை, ஆனால் தூரத்திலிருந்து ஆவியை உணர முடிந்தது. விரைவில் மதப் பாகுபாடுகளில் மாற்றம் ஏற்படும் என்று நம்புகிறேன். நேரம் வரும், நாம் அனைவரும் மதத்தின் அடிப்படையில் அல்ல, சமமாக நடத்தப்படுவார்" என்று அமலா பால் கோயில் பார்வையாளர் பதிவேட்டில் எழுதியுள்ளார்.
கோயில் நிர்வாகம் விளக்கம்
இச்சம்பவம் வைரலானதை அடுத்து கருத்து தெரிவித்துள்ள கோயில் அறக்கட்டளை செயலாளர் கூறுகையில், இதற்கு முன்பும் பிற மதத்தினரும் சாமி தரிசனம் செய்தனர்.
இருப்பினும், ஒரு பிரபலம் வந்தால், அது சர்ச்சைக்குரியதாக மாறும், ”என்று அவர் கூறினார்.
நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள நெறிமுறைகளை மட்டுமே தாங்கள் பின்பற்றி வருவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.