க்ளாமர்க்காக யூஸ் பண்றாங்க...இனி அதுல நடிக்கமாட்டேன் - அமலா பால் ஓபண்டாக்!
பெண்களை கவர்ச்சிக்காக பயன்படுத்துவதால், தான் தெலுங்கு படங்களில் நடிக்கமாட்டேன் என நடிகை அமலா பால் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
அமலா பால்
தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரபல கதாநாயகியாக வலம் வருபவர் அமலாபால். கடந்த 2010-ம் ஆண்டு தமிழில் வெளியான மைனா படம் மூலம் அறிமுகமாகி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஆக்கிரமித்தார்.
அதனைத் தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்பு குவிந்த வண்ணம் இருந்தன. ஆனால், தெலுங்கில் 5 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். தற்போது தெலுங்கு சினிமாவை விட்டு விலகியிருக்கும் அமலா பாலிடம் தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து நடிக்காததற்குக் காரணம் என்ன என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
தெலுங்கு திரையுலகம்
அதற்கு பதிலளித்த அமலா பால், “நான் தெலுங்கில் நடிக்க வந்தபோது, தெலுங்கு திரையுலகம் குறிப்பிட்ட குடும்பங்களின் பிடியில் இருப்பதை உணர்ந்தேன். நான் நடித்த சமயத்தில் தெலுங்கு படங்களே வித்தியாசமாக இருக்கும்.
ஒவ்வொரு படத்தில் குறைந்தது 2 ஹீரோயின்களாவது இருப்பார்கள். அவர்களை பாடல்களுக்கும், காதல் காட்சியில் நடிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தினர். ஓப்பனாக சொல்ல வேண்டும் என்றால் பெண்களை அவர்கள் கவர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தினார்கள்.
கவர்ச்சிக்கு மட்டுமே
பெரும்பாலும் கமர்ஷியல் படங்களை மட்டுமே எடுப்பார்கள், அதில் ஹீரோக்கள் தான் பெரும்பாலான காட்சிகளை ஆக்கிரமித்து விடுவார்கள். இதனால் என்னால் அங்கு நீடிக்க முடியவில்லை. ஆனால் தமிழ் திரையுலகம் அப்படி இல்லை.
இங்கு என வித்தியாசமான ரோல்கள் நிறைய கிடைத்தன” என தெரிவித்துள்ளார்.