விடாமல் live-இல் கணவர் செய்த காரியம்..கடுப்பாகி கன்னத்தில் அறைந்த அமலா பால்!
நடிகை அமலா பால் அவரது கணவர் கன்னத்தில் அறைந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
அமலா பால்
தமிழ் சினிமாவில், சிந்து சமவெளி என்னும் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா பால். முதல் படம் தோல்வியடைந்தாலும், அந்தப் படத்தில் அவர் நடித்த கதாபாத்திரமும் சர்ச்சைக்குரியதாக இருந்தது. இதனால் அவர் பக்கம் பலரது கவனம் திரும்ப தொடங்கியது. இதனால், அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவிந்தன.
அடுத்ததாக அவர் நடித்த மைனா படம் ஹிட்டாகியதால் முன்னணி ஹீரோயின் என்ற இடத்துக்கு நகர்ந்தார். அதன் பிறகு பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்தார். இதற்கிடையில், தலைவா படத்தில் நடித்தபோது அமலா பாலும் இயக்குநர் ஏ.எல்.விஜய்யும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
live- இல் கணவர்
அடுத்த சில வருடங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவருக்கும் விவகாரத்தும் ஆனது. இதற்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில், ஜகத் தேசாய் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் அமலா பால். அவர் இப்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
இதற்கிடையே அமலா பால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அமலா பாலும், ஜகத் தேசாயும் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது அமலா பாலிடம் ஜகத் குறும்புத்தனம் செய்ய,
ஒருகட்டத்தில் பொறுமை இழந்த அமலா பால் ஜகத் தேசாயின் கன்னத்தில் செல்லமாக அடிக்கிறார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. மேலும் அதை பார்த்த ரசிகர்கள் செம க்யூட்டா இருக்கே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.