மகளை திருமணம் செய்ய கேட்ட ஸ்ரீதேவி தாய் - மறுப்பு தெரிவித்த கமல்!
மகளை திருமணம் செய்ய ஸ்ரீதேவியின் தாய் கோரியுள்ளார்.
ஸ்ரீதேவி
தமிழ் சினிமாவில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ஜோடிகளில் ஒன்று கமல்ஹாசன் - ஸ்ரீதேவி. 25க்கும் மேற்பட்ட படங்களில் இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர்.
இந்நிலையில், கமல்ஹாசனை தனது மகள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நடிகை ஸ்ரீதேவியின் தாயார் விரும்பியுள்ளாராம். இதுகுறித்து முன்னதாக பேட்டி ஒன்றில் பேசியுள்ள கமல்ஹாசன்,
மறுத்த கமல்ஹாசன்
"ஸ்ரீதேவியின் தாயும், நானும் அவரது திருமண வாய்ப்புகள் பற்றி பல முறை விவாதித்துள்ளோம். அவர் தனது மகளை திருமணம் செய்து கொள்ளுமாறு பலமுறை ஜோக் செய்துள்ளார். அப்படி மட்டும் நடந்தால், எங்களது வாழ்க்கை பயணமானது பைத்தியக்கார தனமாக இருக்கும்.
நான் ஸ்ரீதேவியை மறுநாளே அவரது வீட்டுக்கு திருப்பி அனுப்பிவிட நேரிடும்.
ஸ்ரீதேவி தன் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். இறக்கும் வரை சார் என்றே அழைத்தார். எங்களுக்கு இடையிலான உறவு மிகவும் தூய்மையானது” எனத் தெரிவித்துள்ளார்.