சொகுசு கப்பல் வாங்கிய ஆல்யா மானசா..விலையை கேட்டா தலை சுற்றும் - எவ்வளவு தெரியுமா?
பிரபல சீரியல் நடிகை சொகுசு கப்பல் ஒன்றை ஆல்யா மானசா வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆல்யா மானசா
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நடன நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகிப் பிரபலமானார். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி தொடர் மூலம் சின்னதிரை நடிகையாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் ஆல்யா மானசா வரவேற்பைப் பெற்றார்.
அப்போது அந்த தொடரில் கதாநாயகியாக நடித்த நடிகர் சஞ்சீவை காதலித்து 2019ல் திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்தது. இதனால் தொடரில் இருந்து விலகினார். அதன்பின் ராஜா ராணி 2 தொடரில் முதல் நடிக்க அதன்பின் மீண்டும் கர்ப்பமாகக் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
சொகுசு கப்பல்
தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரில் முக்கிய பாத்திரத்தில் நடித்தும் வருகிறார். சஞ்சீவும் கயல் தொடரில் முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகிறார்.சமீபத்தில் பல கோடி மதிப்பிலான வீடு ஒன்றைக் கட்டியிருந்தனர்.
இந்நிலையில் ஆல்யா- சஞ்சீவ் ஜோடி சொகுசு கப்பல் ஒன்றை வாங்கி போட் ஹவுஸ் மூலம் தொழிலைத் தொடங்கியுள்ளனர். இந்த சொகுசு கப்பலின் விலை ரூபாய். 2 கோடி எனக் கூறப்படுகிறது ஆலியா மானசா தொடரில் நடிப்பதற்கு ஒரு நாளைக்கு ரூபாய் 50,000 சம்பளமாகப் பெறுவது குறிப்பிடத்தக்கது.