கணவரை விவாகரத்து செய்யும் ஆலியா மானசா? பழிவாங்கனும் - கொந்தளித்த நடிகை!
கணவரை விவாகரத்து செய்யப்போவதாக பரவிய வதந்திக்கு ஆலியா மானசா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ஆலியா மானசா
சின்னத்திரை ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஆலியா மானசா. அதே சீரியலின் கதாநாயகனாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

தற்போது, ஆலியா இனியா சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது குடும்ப புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்வார். ஆனால் சமீப காலமாக அதிகமாக ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடியாக புகைப்படங்களை போஸ்ட் செய்யவில்லை.
விவாகரத்து?
இதனால், இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக செய்திகள் பரவியது. இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள அவர், எங்களை பற்றி இந்த மாதிரி விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்ற செய்தி வரும் போதெல்லாம் நாங்கள் சிரித்துக் கொண்டுதான் இருப்போம். பெரியதாக எந்த ரியாக்ஷனும் கொடுக்க போறது கிடையாது.

அதுபோல சில ஏமாற்றங்களை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. கூடவே இருந்து சிலர் ஏமாற்றுவதை பார்த்து நான் ஆரம்பத்தில் அதிகமாக கோபப்பட்டு இருக்கிறேன். அவர்களை பழிவாங்க வேண்டும் என்றெல்லாம் ஆரம்பத்தில் நான் நினைப்பேன். ஆனால் இப்போதெல்லாம் அந்த சிந்தனை எனக்கு வருவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
Tamizha Tamizha: காதலித்த கணவருக்கு கண்முன் நடந்த இரண்டாவது திருமணம்! 14 ஆண்டுகளாக குறையாத காதல் Manithan
இஸ்ரேலிய இரசாயனத் தொழிற்சாலையை பதம் பார்த்த ஈரானிய ஏவுகணை : மக்களுக்கு வெளியான அவசர அறிவிப்பு IBC Tamil