சஞ்சீவை காதலிக்க காரணமே இதுதான்; ஆலியா பளீச் - ரசிகர்கள் அதிர்ச்சி!

Serials Alya Manasa
By Sumathi May 11, 2023 06:45 AM GMT
Report

நடிகை ஆலியா மானசா தன்னுடைய காதல் கதை குறித்து மனம் திறந்துள்ளார்.

ஆலியா மானசா

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலமாக பிரபலமானவர் நடிகை ஆலியா மானசா. அதே சீரியலில் ஹீரோ பாத்திரத்தில் நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தனது காதல் கதை குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சஞ்சீவை காதலிக்க காரணமே இதுதான்; ஆலியா பளீச் - ரசிகர்கள் அதிர்ச்சி! | Alya Manasa Real Reason To Love Sanjeev

அதில், சஞ்சீவை சூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்தேன். விளம்பரங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது சஞ்சீவை பார்த்ததும் இவர் ரொம்ப அழகாக இருக்கிறாரே எனத் தோன்றியது. அவரை அண்ணா என்றே அழைத்தேன். பல மாதங்கள் கழித்து ராஜா ராணி சீரியலுக்கான சூட்டிங் ஸ்பாட்டில் சஞ்சீவ் வந்திருந்தார்.

காதல் பயணம்

முதல் நாள் சஞ்சீவிக்கு மேக்கப் போட்டுக் கொண்டிருக்கும் போது அப்படியே கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தேன். அப்போது சஞ்சீவ் என்னாச்சு என கேட்க, அதற்கு பிறகு சுயநினைவு வந்தது. ஐயையோ இப்படி கூட நடிக்கும் நபரை இப்படி பார்த்துக்கிட்டு இருக்கோமே இனி என்ன நினைப்பாங்க என்று எனக்கு தோன்றியது.

சஞ்சீவை காதலிக்க காரணமே இதுதான்; ஆலியா பளீச் - ரசிகர்கள் அதிர்ச்சி! | Alya Manasa Real Reason To Love Sanjeev

பிறகு இருவரும் ஒன்றாக சீரியலில் நடிக்கும் போது எங்களுக்கு ஏற்பட்ட புரிதல் மற்றும் விட்டுக் கொடுக்கும் தன்மையால் தான் நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். இப்போ வரைக்கும் திருமணம் செய்து கொண்டாலும் நாங்கள் காதலித்துக் கொண்டுதான் இருக்கிறோம் எங்கள் இருவருக்கும் எந்த ஈகோவும் கிடையாது.

ஏதாவது எனக்கு சொன்னால் கூட நான் அதை திருத்திக் கொள்வேன். சில நேரங்களில் நான் கோபப்பட்டால் சஞ்சீவ் சமாதானப்படுத்தி விடுவார். அல்லது சஞ்சீவ் கோவப்பட்டால் நான் சமாதானப்படுத்தி விடுவேன். இப்படித்தான் எங்களுடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.