விஜய் வீடியோ - முட்டுக் கொடுத்தவர்களே வெட்கித் தலைகுனியும் நிலை!

Vijay Death Karur Thamizhaga Vetri Kazhagam
By Sumathi Sep 30, 2025 05:33 PM GMT
Report

வெட்கித் தலைகுனியும் அளவுக்கு விஜயின் ஒற்றை வீடியோ அமைந்து விட்டதாக ஆளூர் ஷாநவாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

விஜய் வீடியோ 

கரூர் கூட்டநெரிசல் சம்பத்தில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக 3 நாட்களுக்குப் பின் விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார்.

vijay

இதுதொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் தனது எக்ஸ் தளத்தில், “விஜய்யிடம் அரசியல் கூர்மை இல்லை என்று தான் நினைத்தோம். அவர் வெளிவர வெளிவரத் தான், துளி கூட அவரிடம் அரசியல் நேர்மை இல்லை என்பது அம்பலமாகிறது.

திட்டமிட்ட நாளில் வராமல் திடீரென கரூர் வந்தது, குறித்த நேரத்தில் வராமல் மிகமிக தாமதித்தது, குறிப்பிட்ட எண்ணிக்கையை விட அதிக கூட்டத்தை வரவைத்தது, கூடிய மக்களுக்கு குடிக்க தண்ணீர் ஏற்பாடு கூட செய்யாதது, நீதிமன்றம் சொல்லியும் கேட்காமல் குழந்தைகள் பெண்களை திரட்டியது,

விஜய் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூற ரெடி; ஆனால்.. தவெக வழக்கறிஞர்

விஜய் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூற ரெடி; ஆனால்.. தவெக வழக்கறிஞர்

ஆளூர் ஷாநவாஸ் கருத்து

போலீஸ் எச்சரித்தும் கேட்காமல் கூட்டத்தில் புகுந்தது, ஜெனரேட்டர் பகுதியை சூறையாடியது, ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கியது, பிரச்சனை என்ற உடன் ஓடி ஒளிந்தது, மக்களை சந்திக்காமல் கட்சி கட்டமைப்பே கள்ள மெளனம் காத்தது என்று ஓராயிரம் பிழைகள் செய்தும், ஒரு வருத்தம் கூட தெரிவிக்காதது மட்டுமல்ல,

aloor navas

முதலமைச்சருக்கு சவால் விட்டு சண்டைக்கும் இழுக்கிறார் விஜய். மூன்று நாட்களாக முக்கி முக்கி விஜய்க்கு முட்டுக் கொடுத்தவர்கள் கூட, வெட்கித் தலைகுனியும் அளவுக்கு விஜய்யின் ஒற்றை வீடியோ அமைந்துவிட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார்.