திமுகவை வீழ்த்த யாருடனும் கூட்டணி வைப்பேன் - டிடிவி தினகரன் உறுதி
திமுகவை வீழ்த்த யாருடனும் கூட்டணி வைக்க தயார் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
டிடிவி தினகரன்
தஞ்சையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சென்னையில் மழை நீர் வடிகால்வாய் தூர்வாரும் பணிகளுக்காக கண்முன்னே குழி தோண்டி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், 80 சதவீதம், 90 சதவீதம் பணிகள் முடிந்து விட்டது என பொய் சொல்லாமல் உண்மையை மக்களிடம் சொல்லி இருக்கலாம். இதில் திமுக செயல் அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது. பாராளுமன்றத் தேர்தலில் மிகப்பலம் வாய்ந்த கூட்டணி அமைப்போம் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதை அவரிடம் தான் கேட்க வேண்டும்.
கூட்டணி வைக்க தயார்
குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக திருமாவளவன் பேசுவதை நிறுத்த வேண்டும். அவர் மக்கள் நலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும். ஆட்டுக்கு தாடி எப்படி தேவை இல்லையோ அதுபோல்தான் கவர்னர் பதவியும் என்பது எங்களது கொள்கை.
கவர்னர் ஆர்.என்.ரவி பேசுவதை பெரிதுபடுத்த தேவையில்லை. அவர் ஒரு அதிகாரிதான். திமுகவை வீழ்த்த கூட்டணியால்தான் முடியும். அதற்காக யாருடனும் கூட்டணி வைக்க தயார். கூட்டணியின் தலைமை குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்து கொள்வோம்.
எனவே, ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒன்றினைந்து கூட்டணி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.