ஜெயலலிதாவின் மரணம் இயற்கையான மரணம் - டிடிவி தினகரன்
ஜெயலலிதாவின் மரணம் இயற்கையான மரணம் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் விமர்சனம்
தமிழக அரசிடன் ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சென்னை தி.நகரில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், அம்மாவின் (ஜெயலலிதா) மரணம் இயற்கையான மரணம் தான்.
இந்தியாவிலேயே பெரிய மருத்துவமனை அங்கிருந்து உச்சநீதிமன்றம் உத்தரவு படி வந்த மருத்துவ வல்லுநர் குழு கொடுத்த தகவலை நிராகரித்தது தான் ஆணையம். அரசியல் ஆதாயத்திற்காக அமைக்கப்பட்ட ஒரு ஆணையம் தான் இது.
இறப்பு தேதியில் எந்த குழப்பமும் இல்லை.
ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டதே அரசியலுக்காக தான்.
எங்கள் சித்தி (சசிகலா ) உட்பட குற்றம்சாட்டப்பட்டவர்கள் சட்டப்படி எதிர்கொள்வார்கள் என்று தெரிவித்தார்.