புஷ்பா 2 பிரீமியர் ஷோ.. தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம் - நெருக்கடியில் சிக்கிய அல்லு அர்ஜுன்!
புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் காட்சியின் போது நெரிசலில் சிக்கிய 8 வயது சிறுவன் மூளைச்சாவு அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புஷ்பா 2
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் புஷ்பா 2. இந்த படத்தின் ( பிரீமியர் ஷோ) முதற்காட்சியை ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் திரையிடப்பட்டது.
இதனைக் காண அல்லு அர்ஜுன் திரையரங்கிற்கு வர உள்ளதாகத் தகவல் வெளியானது.இதனையடுத்து சுமார் இரவு 9.30 மணியளவில் அல்லு அர்ஜுன், அவரது மனைவி மற்றும் ராஷ்மிகா மந்தனா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் திரையரங்கிற்குப் படம் பார்க்க வந்தனர்.
பிரீமியர் ஷோ
அப்போது அல்லு அர்ஜுனை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரையரங்கிற்குள் முண்டியடித்துக் கொண்டு உள்ளே செல்ல முயன்றனர். அந்த சமயத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமானோர் மயங்கி விழுந்தனர்.
இதில் ரேவதி என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் .இதனைத் தொடர்ந்து அவரது மகன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 14 நாட்களாகச் சிகிச்சையிலிருந்த அந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்து உயிரிழந்தார்

Singappenne: ஆனந்திக்காக துணிந்த அன்பு.. விழிபிதுங்கி நிற்கும் கருணாகரன்- சூடுபிடிக்கும் கதைக்களம் Manithan

இலங்கையால் சமாளிக்கவே முடியாத ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி: சி.ஐ.டியிடம் வெளிப்படுத்திய மைத்திரி! IBC Tamil
