மீண்டும் CSK அணியில் இடம்பெறும் சுரேஷ் ரெய்னா..வெளியான தகவல்- உற்சாகத்தில் ரசிகர்கள்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐபிஎல்
ஐபிஎல் தொடருக்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் முதல் போட்டி மார்ச் 22 ஆம் தேதி தொடங்குகிறது. இதில் பெங்களூரு –கொல்கத்தா அணிகள் மோத உள்ளது.
இதனையடுத்து மார்ச் 23-ல் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டியில் மும்பை –சென்னை அணிகள் மோதுகின்றன.கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் நடைபெறும் இத்தொடரில், 10 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளது.
அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஒன்று. சில ஆண்டுகளுக்கு முன் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சுரேஷ் ரெய்னா விளையாடி வந்த நிலையில், கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றார்.
சுரேஷ் ரெய்னா
தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அணியின் வர்ணனையாளராக சுரேஷ் ரெய்னா இருந்து வருகிறார். இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக சுரேஷ் ரெய்னா நியமிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.
எனினும், இதுகுறித்து சி.எஸ்.கே. அணி நிர்வாகம் தரப்பில் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஆனாலும் அவர் வரவேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.