மிக்ஜாம் புயல் எதிரொலி...நாளை பொது விடுமுறை..தனியார் நிறுவனங்களும் லீவ்!!
புயலின் எதிரொலியாக தமிழக அரசு பல முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கனமழை
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதலே மழை பெய்து வருகிறது.தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
நேற்று இது தென்மேற்கு வங்கக்கடலில் புயலாக புயலாகவும். இந்த புயல் சின்னத்திற்கு மிக்ஜாம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தின் கடலோர பகுதிகளான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம் போன்ற இடங்களில் லேசானது முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த புயலானது வடமேற்கு திசையில் டிசம்பர் 4ஆம் தேதி அதிகாலை தெற்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய வட தமிழக கடற்கரையை அடைந்து 5-ம் தேதி அதிகாலையில் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே புயலாக கரையைக் கடக்கவுள்ளது.
இந்த புயல் சின்னத்திற்கு மிக்ஜாம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தின் கடலோர பகுதிகளான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம் போன்ற இடங்களில் லேசானது முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை
இந்த புயலானது வடமேற்கு திசையில் டிசம்பர் 4ஆம் தேதி அதிகாலை தெற்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய வட தமிழக கடற்கரையை அடைந்து 5-ம் தேதி அதிகாலையில் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே புயலாக கரையைக் கடக்கவுள்ளது.
அதே போல அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு. அத்தியாவசியமெனில் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வரவும் மக்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.