சென்னையில் விட்டு விட்டு மழை பெய்ய காரணம் என்ன..?
காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது முதலே சென்னையில் விட்டு விட்டு தான் மழை பெய்து வருகின்றது.
கனமழை
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுப்பெற்று "மிக்ஜாங்" புயலாக மாறுகிறது. அதன் காரணமாக வடதமிழகத்தின் கடலோர பகுதிகளில் தொடர்ந்து அவ்வப்போது விட்டு விட்டு கன மழை பெய்து வருகின்றது.
இன்று முதல் வரும் 5 -ஆம் தேதி கனமழை நீடிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விட்டு விட்டு ஏன் மழை..?
கடலின் மேலுள்ள மேகங்கள் தனி தனி அலை அலையாக காணப்படுவதை அடுத்து சென்னையில் மழை விட்டு விட்டு மழை பெய்கிறது. மேகங்கள் கிழக்கு திசையில் இருந்து மேற்காக நகருவதன் காரணமாக தான் தொடர் மழை இல்லை.
இருப்பினும் அடுத்த சில மணி நேரத்தில், சென்னையில் தொடர்ந்து மழை பெய்வது தொடங்கி விடும் என கூறப்படுகிறது.
மேலும், வடகடலோர பகுதிகளான மாமல்லபுரத்தில் இருந்து பழவேற்காடு வரை காற்றின் வேகம் 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், திங்களன்று காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.