முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு அரசுக்கு எதிராகத் தொடரும் மீனவர்கள் கைது, இயற்கை பேரிடரைச் சரி செய்ய போதிய நிதியை வழங்காதது.
மாநிலத்தின் பிரதிநிதித்துவம் குறையும் , மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாடாளுமன்றத் தொகுதிகளை மறு சீரமைப்பு போன்ற பிரச்சனைகளுக்குத் தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த சூழலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து கட்சி
இதற்காகத் தலைமைச் செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 10 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
மேலும் அனைத்து கட்சிக்கூட்டத்தில், தொகுதி மறுவரையறை மட்டுமின்றி, நீட்தேர்வு, மும்மொழிக் கொள்கை, நிதி ஒதுக்கீடு தொடர்பாகப் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.