கவுரவம் பார்க்காமல் அதிமுக, பாமக, தவெக உள்ளிட்ட கட்சிகள் வர வேண்டும் -மு.க.ஸ்டாலின்!
மார்ச் 5-ம் தேதி (நாளை) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
மு.க.ஸ்டாலின்
நாகை மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.139.92 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசியவர்நாகை மாவட்டம் வேதாரண்யம் தலைஞாயிறு பகுதியில் சுமார் 450 ஏக்கரில் ரூ.250 கோடி செலவில் சிப்காட்தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்றும் ,ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்குச் சென்னையில் ரூ.55 கோடியில் ஹஜ் புனித இல்லம் கட்டப்படும் கூறினார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடரும் மீனவர்கள் கைது, இயற்கை பேரிடரைச் சரி செய்ய போதிய நிதியை மத்திய அரசு தரவில்லை என்று குற்றம்சாட்டினார். மேலும் தமிழகத்தின் வளர்ச்சி மத்திய அரசின் கண்களை உறுத்துகிறது என்று கூறினார்.
அனைத்துக் கட்சி கூட்டம்
தொடர்ந்து இருமொழி கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் மார்ச் 5-ம் தேதி (நாளை) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் கட்சிகள் அரசியல் கருத்து வேறுபாடுகளை ஓரமாக வைத்துவிட்டு, தங்களது முடிவை மறுபரிசீலனை செய்து, கவுரவம் பார்க்காமல் அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக, பாஜக, விசிக, இடதுசாரிகள், பாமக, தவெக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என்று முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.