அம்மா வழியில்...40 தொகுதிகளிலும்...கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த EPS வியூகம்..!

ADMK Edappadi K. Palaniswami
By Karthick Jan 29, 2024 03:54 PM GMT
Report

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் நிற்க அதிமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல்

வரும் நாடாளுமன்ற தேர்தல் அதிமுகவிற்கு சற்று கடினமான ஒன்று தான் என்று கூற வேண்டும். தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இது வரை அதிமுகவின் கூட்டணிக்கு பெரிய கட்சிகள் இசையவில்லை.

all-40-seats-will-be-contested-in-irattai-ilai-

தேமுதிக, பாமக முடிவு என்ன என்பது முடிவாகாத நிலையில், அக்கட்சிகளை தங்கள் பக்கம் ஈர்க்க பெரும் முயற்சிகளை பாஜக மேற்கொண்டு வருகின்றது. இந்த சூழலில், தான் இன்று அதிமுகவின் நாடாளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட குழுக்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

all-40-seats-will-be-contested-in-irattai-ilai-

இதில், முக்கிய முடிவாக வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு - புதுச்சேரியை சேர்த்து 40 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

40 தொகுதிகளிலும்... 

மேலும், கூட்டணிக்கு தேமுதிக, பாமக போன்ற கட்சிகளை கூட்டணிக்காக அழைக்கும் முடிவில் அதிமுகவுள்ளதாக திட்டத்தில் இருக்கும் பட்சத்தில், சிறிய கட்சிகளை இணைத்து 40 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

all-40-seats-will-be-contested-in-irattai-ilai-

கடந்த தேர்தல்களில், பாஜகவின் கூட்டணி தான் சிறுபான்மையின மக்களின் வாக்கை அதிமுகவிடம் இருந்து பறித்ததாக விமர்சிக்கப்படும் நிலையில், தற்போது கூட்டணியை முறித்துள்ள கட்சியின் எடப்பாடி பழனிசாமி,

தூக்கத்துல எழுப்பி கேட்டாலும்...பாஜக கூட கூட்டணி இல்லை தான் கூறுவோம் - ஜெயக்குமார் உறுதி..!

தூக்கத்துல எழுப்பி கேட்டாலும்...பாஜக கூட கூட்டணி இல்லை தான் கூறுவோம் - ஜெயக்குமார் உறுதி..!

ஜெயலலிதாவின் வழியில் செல்வது கட்சிக்கு எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் தேர்தல் வரை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.