ஆட்சிக்கு வந்தால் CSK டீம்'ல 11 பேரும் தமிழர்கள் தான் - சீமான் அதிரடி..!

Chennai Super Kings Naam tamilar kachchi Seeman
By Karthick Jan 29, 2024 07:39 AM GMT
Report

நாம் தமிழர் குத்து பாட்டு போட்டு கூட்டத்தை சேர்க்கவில்லை என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

வீரவணக்க நாள்

முத்துக்குமார் 15வது ஆண்டு வீரவணக்க பொதுக்கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெற்றது.

all-11-players-will-be-tamil-in-csk-seeman

இந்த பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பழனிபாபா, முத்துக்குமார் ஆகியோருக்கு மரியாதை செய்தார். அதனை தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அவர், கட்சி தொடங்கியது முதலே கூட்டணி இல்லை என்பதும் தனித்துதான் பயணம் என்று குறிப்பிட்டு, நா.த.க'வினர் மக்களை நம்புகிறோம் என்றார்.

பாராளுமன்ற தேர்தலில் தனித்து தான் போட்டி; இந்தியா கூட்டணி நீடிக்காது - சீமான் பேட்டி!

பாராளுமன்ற தேர்தலில் தனித்து தான் போட்டி; இந்தியா கூட்டணி நீடிக்காது - சீமான் பேட்டி!

மக்கள் எங்களை கைவிட மாட்டார்கள் என உறுதிபட தெரிவித்த சீமான், தோற்றாலும், வெற்றி பெற்றாலும் தனித்துதான் என வரலாறு பேசும் என்று கூறினார். 

11 பேரும்...

மேலும், தங்கள் கட்சிக்கு கூடும் கூட்டத்தைக் கண்டு மற்ற கட்சிகள் கலக்கம் கொள்கின்றனர், இது கொள்கைக்காக கூடும் கூட்டம் என்றும் திமுக ஒரு கம்பெனி என்று குறிப்பிட்டு, அது கருணாநிதி குடும்பத்தின் சொத்து என்று விமர்சித்தார்.

all-11-players-will-be-tamil-in-csk-seeman

ஒரு ரூபாய் காசு கொடுக்காமல் மற்ற கட்சிகளால் கூட்டத்தையோ கூட்ட முடியாது என்று விமர்சித்த அவர், நாம் தமிழர் செய்வதுதான் புரட்சி என்று அதிரடியாக தெரிவித்தார். மேலும், ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் சென்ற பிரதமர் மோடி ஏன் திருச்செந்தூர் செல்லவில்லை? என்று வினவிய சீமான், ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்பதை சுட்டிக்காட்டி, நாங்க குத்து பாட்டு போட்டு கூட்டத்தைக் கூட்டவில்லை என்றார்.

மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழர்கள் இல்லை என்ற வருத்தம் வேண்டாம், நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் அணியில் 11 பேரும் தமிழர்கள்தான் என்ற சீமான், நாமும் சேர்ந்து விளையாடுவோம் என கூறினார்.