மாறுவேடத்தில் ஏலியன்கள்..மனிதர்களுடன் வாழ்கின்றனர் - வெளியான திடுக்கிடும் தகவல்!
ஏலியன்கள் பூமியில் மனிதர்களுடன் வாழ்ந்து வருகின்றனர் என ஹவார்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
ஏலியன்கள்..
இந்த உலகத்தில் மனிதர்கள் வாழ்வது போல, மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினங்களும் மற்ற கிரகங்களில் உள்ளனவா என்பது பற்றிய ஆராய்ச்சிகள் பல ஆண்டுகளாகவே நடந்து வருகிறது. வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்களா, இல்லையா என விஞ்ஞான உலகில் நீண்ட காலமாகவே உலாவி வருகிறது.
அந்த வகையில், ஹார்வர்ட் பல்கலைகழகம் சமீபத்தில் ஏலியன் குறித்து ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது. முன்னதாக மெக்சிகோ நகரில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஏலியன்ஸ் கண்காட்சி நடத்தப்பட்டது. இந்தக் கண்காட்சியில் 2 ஏலியன்ஸ்களின் உடல்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
மெக்சிகோவில் நடந்த இந்த ஏலியன்ஸ் கண்காட்சி வேற்றுக்கிரகவாசிகள் மீதான ஆர்வத்தை மக்களிடம் மேலும் அதிகரித்தது. இதற்கிடையில், வேற்றுகிரகவாசிகள் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கலாம், ஒருவேளை நிலவுக்குள் ஆழமான ஒரு மேம்பட்ட தொழில்நுட்ப நாகரிகத்தில் வசிக்கலாம் அல்லது ஒருவேளை,
திடுக்கிடும் தகவல்
நிலவின் உள்ளே இருக்கலாம் என்று பல்வேறு கூற்றுகளை அந்த ஆராய்ச்சி அறிக்கை முன்வைத்துள்ளது.பல்கலைக்கழக மாணவர்கள் மனித வளம் பெருக்கும் திட்டம் என்ற பெயரில் பல ஆண்டுகளாக இந்த ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர்.
அதன்படி அந்த ஆய்வறிக்கையில், பூமியில் பாதாள சுரங்கம் போன்ற மனிதர்கள் செல்ல முடியாத பகுதிகளில் ஏலியன்கள் ரகசிய வாழ்க்கை நடத்தி வரலாம் என்றும், நிலவில் அல்லது மனிதர்களிடையே அவர்கள் நடமாட முடியும் என்றும்,
பூமிக்கு அவ்வப்போது வந்து செல்ல முடியும் என்றும், ஏலியன்கள் மனித உருவெடுத்து நம்மிடையே கூட வசித்து வரலாம் எனறு கூறும் ஆராய்ச்சியாளர்கள், இவற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்துள்ளன