பூமிக்கு அருகே ஏலியன்கள் பயணம் செய்யலாம் - ஆய்வு கூறும் தகவல்!
வேற்றுக்கிரக வாசிகள் கரடுமுரடான கிரகங்களை விண்கலமாகப் பயன்படுத்தக்கூடும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
பேராசிரியர் இரினா ரோமானோவ்ஸ்கயா
இந்த ஆய்வு சர்வதேச ஆஸ்ட்ரோபயாலஜி இதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஆய்வின் ஆசிரியரான ஹூஸ்டன் சமூகக் கல்லூரியின் இயற்பியல் மற்றும் வானியல் பேராசிரியர் இரினா ரோமானோவ்ஸ்கயா கூறுகையில்,
பெரிய அளவிலான கிரகங்கள், ஏதோவொரு ஈர்ப்பு விசையால் அவற்றின் உண்மையான அமைப்பிலிருந்து வெளியேறிவிட்டன.
ஏலியன்களின் கூட்டம்
நட்சத்திரங்களுக்கு இடையே உள்ள இருளில் அவற்றைக் கண்டறிவது கடினமாக இருப்பதால் விண்கலமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றார். பிரபஞ்சத்தில் இத்தகைய கரடுமுரடான கிரகங்கள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கலாம்.
ஏலியன்களின் கூட்டம் கட்டுப்பாடற்று மிதக்கும் கிரகங்களில் மீது சவாரி செய்யும் வாய்ப்பு அதிகமாக இருக்கலாம். அதனால்தான் நான் அத்தகைய யூகத்தின் அடிப்படையிலான நாகரிகங்களை காஸ்மிக் ஹிட்ச்ஹைக்கர்ஸ் என்று அழைக்கிறேன்.
இந்த நாடோடி உலகங்கள் ஒரு நட்சத்திரத்திலிருந்து ஆற்றலைப் பெறாவிட்டாலும், அவை வாழ்வதற்கு ஏற்ற சூழலோடு இருக்கலாம்.
அவை நிலத்தடி கடல்கள், ஹைட்ரஜனுடன் கூடிய வளிமண்டலங்கள் மற்றும் எஞ்சிய மைய வெப்பம் ஆகியவற்றைக் கொண்டிருந்தால் நிச்சயமாக வாழ்வதற்கு உகந்ததாக இருக்கும்.
ரோமானோவ்ஸ்காயாவின் கூற்றின்படி, கரடுமுரடான கிரகங்களில் விண்கலங்களை விட அதிகளவிலான நன்மைகள் உள்ளன. ஏனெனில் அவை சொந்த வளங்கள் மற்றும் வாழ்விடங்களைக் கொண்டுள்ளன.
செயற்கையான ஈர்ப்பு தேவையில்லை. எனவே, இதுபோன்ற கடினமான கிரகங்கள் பூமி போன்ற வாழக்கூடிய கிரகங்களுக்கு அருகில் வரும்போது, வேற்றுகிரகவாசிகள் தாங்கள் பயன்படுத்தும் வழக்கமான விண்கலத்தைப் பயன்படுத்தித் தப்பிச் செல்வதென்பது மிக எளிதாகிறது.
ரோமானோவ்ஸ்கயா கூறும்போது, விண்மீன் மண்டலத்தில் போக்குவரத்து விளக்குகள் இல்லை. சூரியக் குடும்பம் ஏதேனும் சுதந்திரமாக மிதக்கும் கிரகத்தின் வழியிலிருந்தால்,
கிரகம் சிவப்பு விளக்கில் நிற்காது. அது சூரியக் குடும்பத்தின் வழியாகப் பறக்கும் என்றார்.