மீண்டும் பொதுவெளியில் தலைகாட்டிய அலிபாபா நிறுவனர் ஜாக் மா
elonmusk
company
chinese
By Jon
அலிபாபா நிறுவனர் கடந்த அக்டோபர் மாதத்திற்கு பிறகு மீண்டும் பொதுவெளியில் தலைகாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அலிபாபா நிறுவனம் சீனாவில் இணைய வழியில் பொருட்களை விற்பனை செய்து வருகிறது.
இதன் நிறுவனர் ஜாக் மா, தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று வந்த நிலையில் அக்டோபர் 24 முதல் அதில் பங்கேற்கவில்லை. இதனால் அவரது உடல் நலம் குறித்து பல்வேறு கருத்துகள் நிலவி வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று இணைய வழிக் கலந்துரையாடலில் பங்கேற்றார்.
அது மட்டுமல்லாமல் ஹாங்காங் பங்குச்சந்தையில் அலிபாபா நிறுவனத்தின் பங்கு மதிப்பு இன்று ஒரேநாளில் 6 விழுக்காடு உயர்ந்துள்ளது.