அட்சய திருதி; உச்சத்தில் தங்கம் விலை - வாங்கமுடியாதவர்கள் கண்டிப்பா இதை செய்யுங்க
தங்கம் வாங்க முடியாதவர்கள் எந்த பொருட்கள் வாங்கினால் மங்களம் உண்டாகும் என்பது குறித்து பார்ப்போம்.
அட்சய திருதி
அட்சய திருதியை இந்த ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி புதன்கிழமை வருகிறது. ஆனால், ஏப்ரல் 29 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 05:31 மணிக்கே திருதியை திதி துவங்கி ஏப்ரல் 30ஆம் தேதி மதியம் 02:12 வரை உள்ளது.
இந்த நாளில் மக்கள் தங்கம் வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஏனெனில் என்ன பொருட்கள் வாங்கினாலும் பெருகும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் தங்கம் வாங்க முடியாதவர்கள் எந்த பொருட்கள் வாங்கினால் மங்களம் உண்டாகும் என்பது குறித்து தெரிந்துக்கொள்வோம்.
என்ன வாங்கலாம்?
கார், பைக், புதிய பட்டு புடவைகள், புதிதாக தொழில் தொடங்குபவர்கள் இந்நாளில் தொடங்கலாம். நிலம், வீடு மற்றும் பிற சொத்துக்களை வாங்க இது சரியான நாளாக பார்க்கப்படுகிறது.
மேலும், அரிசி வெல்லம், பருப்பு, காய்கறிகள் மளிகை பொருட்கள் போன்ற உணவுக்கு சம்பந்தமான பொருட்களையும் வாங்கலாம்.
அரை கிலோ அரிசியை வாங்கி சிலருக்கு தானமாக வழங்கலாம். ஒரு வேளை உணவாவது மற்றவர்களுக்கு வாங்கி தரலாம். இதன்மூலம் நல்ல வளர்ச்சியும், மகாலட்சுமி அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.