அட்சய திருதியை; ரூ.14ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனை - இவ்வளவு அதிகரிப்பா?
அட்சய திருதியை நாளில் ரூ.14ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அட்சய திருதி
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்று பொதுமக்கள் நம்புகிறார்கள். அதனை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளில் மக்கள் நகைகளை வாங்கி மகிழ்வது வழக்கம்.
அந்த வகையில், நேற்று அதிகாலை 4.56 மணிக்கு தொடங்கி, இன்று (சனிக்கிழமை) மதியம் 2.50 மணியுடன் முடிவடைகிறது.
நகை விற்பனை
இந்நிலையில், சென்னையில் உள்ள 5 ஆயிரம் நகைக்கடைகள் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 45 ஆயிரத்துக்கும் அதிகமான சிறிய மற்றும் பெரிய நகைக்கடைகளில் கூட்டல் அலைமோதியது. கடந்த ஆண்டு அட்சய திருதியை நாளில், ரூ.11 ஆயிரம் கோடி வரையில் தங்க நகைகள் விற்பனை இருந்தது.
இந்த ஆண்டு அட்சய திருதியை நாளில், 25 முதல் 30 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. ரே நாளில் ரூ.14 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக தங்கம் உள்பட பல்வேறு நகைகள் விற்பனை நடைபெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.