500 ஆண்டுகளுக்குப் பின் அட்சய திருதியில் குரு பெயர்ச்சி - இந்த ராசிகளுக்கெல்லாம் யோகம் தான்!
500 ஆண்டுகளுக்குப் பிறகு அட்சய திருதியை நாளில் குரு பெயர்ச்சி நடக்கவிருக்கிறது.
அட்சய திருதியை பண்டிகை ஏப்ரல் 22 மற்றும் ஏப்ரல் 23 ஆம் தேதி கொண்டப்படுகிறது. பூஜை முகூர்த்தம் ஏப்ரல் 22, 2023 காலை 07:49 முதல் மதியம் 12:20 வரை. அட்சய திருதியை திதி ஏப்ரல் 22, 2023 அன்று காலை 07:49 மணிக்கு தொடங்குகிறது. அட்சய திருதியை திதி ஏப்ரல் 23, 2023 அன்று காலை 07:47 மணிக்கு முடிவடைகிறது.
இந்நிலையில், மூன்று அதிர்ஷ்ட ராசிகள் பண ஆதாயம், பதவி உயர்வு மற்றும் வெற்றி போன்ற பலன்களை அனுபவிப்பார்கள் எனக் கூறப்படுகிறது.
ரிஷப ராசி:
அட்சய திருதியை அன்று ஆடை, ஆபரணங்கள் மூலம் நீங்கள் பலன் அடைவீர்கள். உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். குடும்பம் மற்றும் காதல் வாழ்க்கையில் திருப்தி அடைவீர்கள். இருப்பினும், பணத்தைச் செலவழிக்கும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும்.
சிம்ம ராசி:
அலுவலக வேலை அல்லது வியாபாரம் தொடர்பான பயணங்கள் சாத்தியமாகும், இதனால் உங்கள் வெளிநாட்டுப் பயணம் நிறைவேறும். அட்சய திருதியை அன்று சமூகத்தில் உங்கள் நற்பெயர் உயரும். குரு பெயர்ச்சி மாணவர்களுக்கும் மிகவும் சாதகமாக இருப்பதால் படிப்பில் நல்ல பலன்கள் கிடைக்கும்.
விருச்சிக ராசி:
நீதிமன்றத்தின் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் தைரியம் மற்றும் வலிமை இரண்டும் அதிகரிக்கும். குருவின் இந்த பெயர்ச்சி இராணுவம், காவல்துறை அல்லது நிர்வாகத் துறையில் உள்ளவர்களுக்கு நன்மை பயக்கும். நீங்கள் வீடு மற்றும் நிலத்தில் முதலீடு செய்ய நினைத்தால், அட்சய திருதியை நாளில் செய்யலாம்.