மக்களவை வேட்பாளராக அக்ஷய் குமார் - பாஜகவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்..?
வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்களவை தேர்தல்
18-வது மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கட்சிகள் போட்டிப்போட்டு கூட்டணி பேச்சுவார்தைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இன்னும் ஓரிரு வாரங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய அளவில் முந்திக்கொண்டு, முதல் கட்சியாக பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. இதில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய் சங்கர், நடிகர் சுரேஷ் கோபி போன்ற பல முக்கிய நட்சத்திரங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
இந்த பட்டியலில், இது வரை 195 பேர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீதான இருக்கும் இடங்களுக்கும் விரைவில் அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் அக்ஷய் குமார் இடம் பெறுவார் என செய்திகள் வெளிவந்துள்ளது. சில காலமாகவே பாஜக, பிரதமர் மோடியுடன் நெருக்கம் காட்டி வரும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக அவருக்கு டெல்லியின் சாந்தினி சவுக் தொகுதியில் வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்பட்ட நிலையில், அது தவிர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.