சமந்தாவை அலேக்கா தூக்கி சுற்றிய அக்ஷய் குமார் - வீடியோ வைரல்!
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிகை சமந்தாவை தூக்கி சுற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
காஃபி வித் கரண்
நடிகைகள் ஜான்வி கபூர் மற்றும் சாரா அலி கானின் காஃபி வித் கரண் 7 எபிசோடிற்குப் பிறகு, அக்ஷய் குமார் மற்றும் சமந்தா ரூத் பிரபு ஆகியோர் வரும் வியாழன் அன்று ஒளிபரப்பாகவிருக்கும் எபிசோடில் கலந்துக் கொள்ளவிருக்கின்றனர்.
திரைப்படத் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் சமூக வலைதளங்களில் அந்த எபிசோடின் ப்ரோமோவைப் பகிர்ந்துள்ளார். எபிசோடின் ப்ரோமோ, ரசிகர்கள் எதிர்பார்த்தபடி, கலகலப்பான உரையாடல்கள், அரட்டைகள், கிளாமர், சீக்ரெட் என அனைத்தும் நிறைந்துள்ளது.
ப்ரோமோ வீடியோ
நிகழ்ச்சியில் எண்ட்ரியாகும் போது, சமந்தாவை கையில் ஏந்தியபடி உள்ளே நுழைந்தார் அக்ஷய் குமார். டான்ஸ் ஆடச் சொல்லி கரண் ஜோஹர் கொடுத்த டாஸ்க்கிலும் அலேக்காக சமந்தாவை தூக்கினார் அக்ஷய்.
Heart of gold and a dash of sexy & bold - my two new guests on the Koffee couch are bringing the heat this Thursday in an all new episode of #HotstarSpecials #KoffeeWithKaran S7 only on Disney+ Hotstar.@DisneyPlusHS @akshaykumar @Samanthaprabhu2 @apoorvamehta18 pic.twitter.com/i0tpm9l2K6
— Karan Johar (@karanjohar) July 19, 2022
அந்த ப்ரோமோ வீடியோவில், நிகழ்ச்சி தொகுப்பாளரான கரண் ஜோஹரிடம், 'மகிழ்ச்சியற்ற திருமணங்களுக்கு நீங்கள் தான் காரணம்' என்று கூறுகிறார். சமந்தா நடத்தும் பேச்சிலர் பார்ட்டியில் நடனமாட, பாலிவுட்டில் இருந்து யாராவது இருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால்,
யாரை அழைப்பீர்கள் என்று கரண் கேட்டதற்கு, ‘ரன்வீர் சிங் மற்றும் ரன்வீர் சிங்’ என்று பதிலளித்தார் சமந்தா. இந்த பதில் அக்ஷய் மற்றும் கரணை ஆச்சரியப்படுத்தியது.