ஒருத்தர் கிட்ட நல்லத பாருங்க..நீங்க யாரு'னு இதுல தெரியுது..!! வீடியோ குறித்து அகிலா ஆவேசம்!!
இனிமேல் இது மாதிரியான தவறான வீடியோக்கள் பரவாது என்று நான் நம்புகிறேன் என்று அகிலா குறிப்பிட்டுள்ளார்.
திருமா - அகிலா வீடியோ
சில தினங்கள் முன்பு வைரல் வீடியோ சீரியல் நடிகையாக வளம் வரும் நடிகை அகிலா மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோரை குறித்து வீடியோ ஒன்று வைரலாகியது. இது பெரும் விமர்சனத்தை பெற்ற நிலையில், அது குறித்து தக்கபதிலடியை நடிகை அகிலா வீடியோ ஒன்றில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ‘‘நிறைய பேர் நான் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்ததாக கூறி வருகின்றனர் வீடியோ ஒன்றும் வைரலாவதை குறிப்பிட்டு, மருத்துவமனை திறந்து வைக்க திருமாவளவன் வந்திருந்த நிலையில், அந்த நிகழ்ச்சியில் வரவேற்புரையை தான் கொடுத்ததாக குறிப்பிட்டார்.
அவர் ஒரு முக்கியத் தலைவராக என்ற காரணத்தால் வெறுமனே, ‘திருமாவளவன் அவர்களை மேடைக்கு அழைக்கிறேன்’ என்று சொன்னார் நன்றாக இருக்காது என குறிப்பிட்டு, ஒரு உரை தயார் செய்து பேசியதாக குறிப்பிட்ட அகிலா, தான் பேசியதை அவர் உற்று கவனித்துக் கொண்டிருந்தார் என்றும் ஆனால் அதை வேறு விதமாக ட்ரோல் பண்ணி, அவரை கலங்கப்படுத்தும் விதமாக பரப்பி வருகின்றனர் என்று குறை கூறினார்.
இவற்றை பார்க்கும் போது கஷ்டமாக இருக்கிறது என்ற அவர், இந்த மாதிரி விசயத்தை பரப்புவதற்கு பதிலாக, அவர் சொல்லும் நல்ல கருத்துக்களை பரப்பலாம் என்று கூறி எந்த பிரபலமாக இருந்தாலும் தேவையில்லாமல் இந்த மாதிரி அசிங்கங்களை பரப்ப வேண்டியதில்லை என கேட்டுக்கொண்டார். மேலும், சில நொடிகளை அந்த வீடியோ காட்சிகளை பார்த்த பலரும், தன்னுடைய புடவை நிறத்தை பார்த்து விட்டு தான் விசிகவில் இணைந்து விட்டதாக நினைத்துக் கொண்டார்கள் என்பதை குறிப்பிட்டு தான் எந்த கட்சியிலும் சேரவில்லை விளக்கமளித்தார்.
வக்கிர புத்தி
ஒரு ஆணை அசிங்கப்படுத்துவதாக நினைத்து உடன் இருக்கும் பெண்ணின் மாண்புக்கும் கலங்கம் விளைவிக்கிறார்கள் என்று விமர்சித்த அகிலா, இப்படி செய்வதால் உங்களின் வக்கிர புத்தி இதன் மூலம் வெளிப்படுகிறது என்று கூறி, ஒருவரிடம் குறை இருந்தாலும், அவரிடம் என்ன நல்ல விசயம் இருக்கிறது என்பதை பார்த்து, குறைகளை விட்டுவிட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
மேலும் அந்த வீடியோவில், அது யாரோ வீட்டு பெண் இல்லை, உங்கள் வீட்டிலும் பெண் இருப்பார்கள். அப்படி தான் அனைத்து பெண்களையும் பார்க்க வேண்டும். இந்த மாதிரி தவறான செயலை இதுக்கு அப்புறமாவது செய்யாமல் இருங்கள். இனிமேல் இது மாதிரியான தவறான வீடியோக்கள் பரவாது என்று நான் நம்புகிறேன் என்று அகிலா குறிப்பிட்டுள்ளார்.