அக்பர், சீதா பெயர் சர்ச்சை; வன அதிகாரி சஸ்பெண்ட் - பாஜக அரசு உத்தரவு!
சிங்கங்களுக்கு அக்பர் சீதா என பெயரிட்ட அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அக்பர் - சீதா
மேற்கு வங்காளத்தில் உள்ள சிலிகுரி சபாரி உயிரியல் பூங்காவிற்கு கடந்த பிப்ரவரியில் 2 சிங்கங்கள் கொண்டுசெல்லப்பட்டன. இதில் 7 வயதுள்ள ஆண் சிங்கத்திற்கு ’அக்பர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
மற்றொரு 6 வயதான பெண் சிங்கத்திற்கு ‘சீதா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்த இரு சிங்கங்களையும் ஒரே இடத்தில் அடைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் விஷயம் என விஷ்வ ஹிந்து பரிஷத் கொல்கத்தா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.
அதிகாரி சஸ்பெண்ட்
இந்த வழக்கு விசாரணையில், ’சீதா, அக்பர் சிங்கங்களின் பெயரை மாற்ற மேற்குவங்க அரசு மற்றும் பூங்கா நிர்காகத்திற்கு கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், திரிபுரா அரசு முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் பிரபின் லால் அகர்வாலிடம் பெயர்கள் குறித்து விளக்கம் கேட்டுள்ளது. இருப்பினும், அந்த அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஏனென்றால், சிங்கங்கள் கொண்டுசெல்லப்பட்டபோது வனவிலங்கு கண்காணிப்பாளராக இருந்த அகர்வால் அக்பர், சீதா என பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.