உலக சாதனை புத்தகத்தில் அஜித்தின் நிறுவனம் - என்ன சாதனை தெரியுமா?
அஜித் குமாரின் சுற்றுலா நிறுவனம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
அஜித் குமார்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். சினிமா துறையை தாண்டி கார் ரேஸ், பைக் பயணம், ட்ரோன் தயாரிப்பு, புகைப்படம் எடுத்தல் என பல விஷயங்களில் ஆர்வமுடையவர்.
மேலும், 2025 ஆம் ஆண்டு துபாயில் நடக்க உள்ள கார் பந்தயத்தில் அஜித் குமார் கலந்து கொள்ள உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
உலக சாதனை
அஜித் குமார் கடந்த ஆண்டு வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ் என்கிற சுற்றுலா நிறுவனம் ஒன்றை தொடங்கினார். இந்த நிறுவனம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில், மிகப்பெரிய ஹார்லி-டேவிட்சன் மோட்டார் சைக்கிள் ரைடை நடத்தியதாக தற்போது உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
ஹார்லி-டேவிட்சன் மெரினா பிரிவு, சென்னை மற்றும் ஹார்லி-டேவிட்சன் பஞ்சாரா பிரிவு, ஹைதராபாத் ஆகியவற்றுடன் இணைந்து வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ் நிறுவனம் இந்த நிகழ்வை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் நடத்தியுள்ளது.
பயணத்தில் ரைடர்ஸ் இயற்கைக்காட்சிகள் மற்றும் இதுவரை பார்க்காத இடங்கள் என இரண்டிலும் சிறந்த அனுபவத்தை பெற உறுதி செய்கிறது. இந்த சாதனை, இந்தியாவில் வளர்ச்சி பெரும் மோட்டார் சைக்கிள் பயணங்களின் சுற்றுலாவை ஊக்குவிக்கும் விதத்தில் அமைந்துள்ளது