மதமும், சாதியும் மனிதனை வெறுக்கவைக்கும் - அஜித்குமார் வைரல் வீடியோ

Ajith Kumar Tamil Actors
By Karthikraja Oct 05, 2024 11:13 AM GMT
Report

பயணங்கள் குறித்து அஜித்குமார் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

அஜித் குமார்

நடிகர் அஜித் குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடா முயற்சி படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் நடித்து வருகிறார். 

ajith car race

சினிமாவை தாண்டி கார் ரேஸ், பைக் பயணம், ட்ரோன் தயாரிப்பு, புகைப்படம் எடுத்தல் என பல விஷயங்களில் தீவிர ஆர்வம் கொண்டவர். மேலும், 2025 ஆம் ஆண்டு துபாயில் நடக்க உள்ள கார் பந்தயத்தில் அஜித் குமார் கலந்து கொள்ள உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

GOAT படம் இப்படி இருக்க வேண்டும் - வெங்கட் பிரபுவிடம் அஜித் சொன்ன விஷயம்

GOAT படம் இப்படி இருக்க வேண்டும் - வெங்கட் பிரபுவிடம் அஜித் சொன்ன விஷயம்

பயணம்

இந்நிலையில் பைக் பயணத்தின் போது அஜித் பேசிய வீடியோ ஒன்றை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் பேசிய அஜித், "பயணம் என்பது சிறந்த கல்விகளில் ஒன்று. 'மதமும் சாதியும் நீங்கள் இதுவரை சந்திக்காத மனிதர்களை கூட வெறுக்க வைக்கிறது’ என்று ஒரு கூற்று உண்டு. அது உண்மைதான். ஒருவரை நாம் சந்திப்பதற்கு முன்பே அவர்களை மதிப்பீடு செய்கிறோம். ஆனால், நீங்கள் பயணிக்கும்போது பலதை அனுபவிக்கலாம்.

நான் பயணித்தின்போது, பல நாட்டைச் சேர்ந்தவர்கள், பல்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களின் கலாச்சாரம் குறித்து அனுபவித்திருக்கிறேன். அதனால், நீங்கள் மக்களைப் புரிந்து கொள்ள முடியும். பயணத்தினால், உங்களைச் சுற்றியுள்ள மக்களை புரிந்து கொள்ள தொடங்குவீர்கள். அது உங்களை மேம்பட்ட மனிதராக்கும்” என பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.