கார் ரேசில் 3வது இடம்; துள்ளி குதித்த அஜித் - குவியும் பாராட்டுக்கள்
அஜித்குமாரின் அணி துபாயில் நடைபெற்ற கார் ரேசில் 3வது இடம் பெற்றுள்ளது.
அஜித்குமார்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள அஜித்திற்கு, சினிமாவை தாண்டி கார் ரேசில் ஆர்வம் அதிகம். இந்நிலையில் துபாயில் நடைபெற்ற 24H அஜித் கலந்துக்கொண்டிருந்தார்.
முன்னதாக பயிற்சியின் போது கட்டுப்பாட்டை இழந்த அஜித்தின் கார் விபத்தில் சிக்கியது. இதில் அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இருந்தாலும் இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
3வது இடம்
இந்நிலையில் தகுதிச்சுற்றில் 7வது இடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறிய அஜித்குமார் ரேஸிங் அணி, துபாயில் நடைபெற்ற 992 பிரிவு கார் பந்தயத்தில் 3வது இடத்தை பிடித்து சாதித்துள்ளது.
இந்நிலையில் தேசிய கொடியை அசைத்து கொண்டே மைதானத்தில் அஜித்குமார் ஓடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் மாதவன் நேரில் சென்று வெற்றி பெற்ற அஜித்தை கட்டிப்பிடித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.
வாழ்த்துக்கள்
வெற்றியின் வெளிப்பாடாக தனது மனைவி ஷாலினிக்கு முத்தம் கொடுத்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். பரிசு பெரும் மேடையில் தனது வீரர்களை முதலில் ஏற்றிவிட்டு பின்னர் தனது மகன் ஆத்விக் உடன் மேடை ஏறினார்.
So so proud.. what a man. The one and only. Ajith Kumar 🫡🫡🫡👍🏻🇮🇳🇮🇳🇮🇳🇮🇳😘😘 pic.twitter.com/gSDyndHv4e
— Ranganathan Madhavan (@ActorMadhavan) January 12, 2025
வெற்றி பெற்ற அஜித்குமாருக்கு திரையுலகை சேர்ந்த வெங்கட் பிரபு, விக்ரம் பிரபு, ஆதிக் ரவிச்சந்திரன், விஜய் வசந்த், அனிருத், சாந்தனு, சிவகார்த்திகேயன், பிரசன்னா, கார்த்திக் சுப்புராஜ், பார்வதி நாயர், நாக சைதன்யா உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.