காதுகள் பத்திரம்… அன்புடன் அஜித்… - சுரேஷ் சந்திரா வெளியிட்ட டுவிட்

Ajith Kumar Twitter
By Nandhini Aug 20, 2022 06:38 AM GMT
Report

நடிகர் அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட டுவிட்டர் பதிவு ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

நிருபரை அதட்டிய சுரேஷ் சந்திரா

சமீபத்தில் பிரபல நடிகை நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெறுவதற்கு முன்தினம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில், தனியார் பத்திரிக்கை நிறுவனத்தை சேர்ந்த ஆனந்தன் என்ற நிருபர் இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் போட்டோ எடுக்க முயற்சி செய்தார்.

அந்த நேரத்தில், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, நிருபர் ஆனந்தனை பார்த்து யார் நீ என்று அதட்டியுள்ளார். பதிலுக்கு அந்த நிருபரும் சுரேஷ் சந்திராவை பார்த்து நீ யார் என்று கேட்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமானது.

பின்னர் தான் நிருபருக்கு தெரிந்தது. அவர் அஜித்தின் மேலாளர் என்று. இதனையடுத்து, சிறிது நேரம் கழித்து சுரேஷ் சந்திராவிடம் மன்னிப்பு கேட்க முயற்சி செய்தார்.

அப்போது, ஆனந்தனின் சுரேஷ் சந்திராவின் உதவியாளர்கள் அந்த நிருபரை தாக்கியதுடன், கழுத்தை பிடித்து வெளியே தள்ளியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, நிருபர் ஆனந்தன், அண்ணாசாலையில் உள்ள காவல்துறையில் புகார் ஒன்றை கொடுத்தார்.

ajith-suresh-chandra-menon

சுரேஷ் சந்திரா டுவிட்

இந்நிலையில், சுரேஷ் சந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “காதுகள் பத்திரம்.. அன்புடன் அஜித்.. என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது இவர் வெளியிட்ட டுவிட் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.     

இதோ அந்த டுவிட்  -